Tuesday, 20 August 2019

Karththaave ugaugamaai கர்த்தாவே யுகயுகமாய்

Karththaave ugaugamaai

1. கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்

2. உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்

3. பூலோகம் உருவாகியே
மலைகள் தோன்றுமுன்
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்

4. ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே

5. சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்

6. கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
இக்கட்டில் நற் சகாயராய்
எம் நித்திய வீடாவீர்

Enthan Jeevan Yesuve எந்தன் ஜீவன் இயேசுவே

Enthan Jeevan Yesuve

1. எந்தன் ஜீவன் இயேசுவே
சொந்தமாக ஆளுமே
எந்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்

2. எந்தன் கை பேரன்பினால்
ஏவப்படும் எந்தன் கால்
சேவை செய்ய விரையும்
அழகாக விளங்கும்

3. எந்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும் என்வாய்
மீட்பின் செய்தி கூறவும்
ஏதுவாக்கியருளும்

4. எந்தன் ஆஸ்தி தேவரீர்
முற்றும் அங்கீகரிப்பீர்
புத்தி கல்வி யாவையும்
சித்தம் போல் பிரயோகியும்

5. எந்தன் சித்தம் இயேசுவே
ஒப்புவித்து விட்டேனே
எந்தன் நெஞ்சில் தங்குவீர்
அதை நித்தம் ஆளுவீர்

6. திருப்பாதம் பற்றினேன்
எந்தன் நேசம் ஊற்றினேன்
என்னையே சமூலமாய்
தத்தம் செய்தேன் நித்தமாய்

Immaanuvelin Iraththathaal இம்மானுவேலின் இரத்தத்தால்

Immaanuvelin Iraththathaal 

1. இம்மானுவேலின் இரத்தத்தால்
நிறைந்த ஊற்றுண்டே
எப்பாவத் தீங்கும் அதினால்
நிவிர்த்தியாகுமே

 2. மா பாவியான கள்ளனும்
அவ்வூற்றில் மூழ்கினான்
மன்னிப்பும் மோட்சானந்தமும்
அடைந்து பூரித்தான்

3. அவ்வாறே நானும் யேசுவால்
விமோசனம் பெற்றேன்
என் பாவம் நீங்கிப் போனதால்
ஓயாமல் பாடுவேன்

4. காயத்தில் ஓடும் ரத்தத்தை
விஸ்வாசத்தால் கண்டேன்
ஒப்பற்ற மீட்பர் நேசத்தை
எங்கும் பிரஸ்தாபிப்பேன்

5. பின் விண்ணில் வல்ல நாதரை
நான் கண்டு பூரிப்பேன்
அங்கென்னை மீட்ட நேசத்தைக்
கொண்டாடிப் போற்றுவேன்

Thooya Thooya Thooyaa தூய தூய தூயா

Thooya Thooya Thooyaa 

1. தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!
தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே!

2. தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்று
தெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே,
கேருபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப்பெற்று,
இன்றென்றும் வீற்றாள்வீர், அநாதியே!

3. தூய, தூய, தூயா! ஜோதி பிரகாசா,
பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர்?
நீரே தூய தூயர், மனோவாக்குக் கெட்டா
மாட்சிமை, தூய்மை, அன்பும் நிறைந்தோர்,

4. தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!
வானம் பூமி ஆழி உம்மை ஸ்தோத்திரிக்குமே,
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே!




Poologaththaarae Yaavarum Karththaavilபூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில்

Poologaththaarae Yaavarum   Karththaavil

1. பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்;
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி, பாட வாருங்கள்.

2. பராபரன் மெய்த் தெய்வமே; நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்;
நாம் ஜனம், அவர் ராஜனே; நாம் மந்தை, அவர் மேய்ப்பனார்.

3. கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்;
சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி, துதிசெய்யுங்கள்.

4. கர்த்தர் தயாளர், இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதே;
அவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே.

5. பின் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகிய
பிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகவும்.

Intha Arul Kaalathil இந்த அருள் காலத்தில்

Intha Arul Kaalathil

1. இந்த அருள் காலத்தில்
கர்த்தரே உம் பாதத்தில்
பணிவோம் முழந்தாளில்

2. தீர்ப்பு நாள் வருமுன்னே
எங்கள் பாவம் உணர்ந்தே
கண்ணீர் சிந்த ஏவுமே

3. மோட்ச வாசல், இயேசுவே
பூட்டுமுன் எம் பேரிலே
தூய ஆவி ஊற்றுமே

4. உந்தன் ரத்த வேர்வையால்
செய்த மா மன்றாட்டினால்
சாகச் சம்மதித்ததால்

5. சீயோன் நகர்க்காய் கண்ணீர்
விட்டதாலும் தேவரீர்
எங்கள்மேல் இரங்குவீர்

6. நாங்கள் உம்மைக் காணவே
அருள் காலம் போமுன்னே
தஞ்சம் ஈயும் இயேசுவே

Kartharai Nambiye Jeevipom கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்

Kartharai Nambiye Jeevipom

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக்கொள்வோம் .

1 . ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளி தனைக் கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும். - கர்த்தரை

2 . உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன் மீது வைத்திடுவார்
கருத்தாய்க் காத்திடுவார் .- கர்த்தரை

3. உள்ளமதின் பாரங்களை
ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார் - கர்த்தரை

4 . அன்புமிகும் அண்ணலிவர்
அருமை இயேசுவை நெருங்குவோம்
தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே
தாங்கி அணைத்திடுவார்.- கர்த்தரை

5 .நீதிமானின் சிரசின்மேல்
நித்திய ஆசீர் வந்திறங்குமே
கிருபை நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே - கர்த்தரை

6 .இம்மைக் கேற்ற இன்பங்களை
நம்மைவிட்டே முற்றும் அகற்றுவோம்
மாறாத சந்தோஷம் தேடிடுவோம்
மறுமை ராஜ்ஜியத்தில்   - கர்த்தரை