Sunday, 11 August 2019

Kaakum Karangal Undenakku காக்கும் கரங்கள் உண்டெனக்கு

Kaakum Karangal Undenakku

காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப் பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்
நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை

நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என்மேல் பறக்க
நேசருக்காய் ஜீவித்திடுவேன்

கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
கர்த்தர் உன்னை கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகுபோல எழும்பிடுவாய்

அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டு மந்தை முதலற்றாலும்
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை

En Jebavelai Vaanjipen என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்

En Jebavelai Vaanjipen

1. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
அப்போதென் துக்கம் மறப்பேன்!
பிதாவின் பாதம் பணிவேன்
என் ஆசையாவும் சொல்லுவேன்!
என் நோவுவேளை தேற்றினார்
என் ஆத்ம பாரம் நீக்கினார்
ஒத்தாசை பெற்றுத் தேறினேன்
பிசாசை வென்று ஜெயித்தேன்

2. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்
மன்றாட்டைக் கேட்போர் வருவார்
பேர் ஆசீர்வாதம் தருவார்
என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்
என் பாதம் தேடு ஊக்கமாய்
என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்
இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன்

3. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
ஆனந்த களிப்படைவேன்
பிஸ்காவின் மேலே ஏறுவேன்
என் மோட்ச வீட்டை நோக்குவேன்
இத்தேகத்தை விட்டேகுவேன்
விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்
பேரின்ப வீட்டில் வசிப்பேன்
வாடாத க்ரீடம் சூடுவேன்!

Saturday, 10 August 2019

Theva Pitha Enthan தேவ பிதா எந்தன்

Theva Pitha Enthan

தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே .

அனுபல்லவி
ஆவலதாய் எனைப் பைம்புன் மேல்
அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.- தேவ

சரணங்கள்
ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார். -தேவ

சா நிழல் பள்ளத் திறங்கிடினும்,
சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே ;
வானபரன் என்னோடிருப்பார் ;
வளை தடியும் கோலுமே தேற்றும் .- தேவ

பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென் றேற்படுத்திச்
சுக தைலம் கொண்டேன் தலையை
சுகமாய் அபிஷேகம் செய்குவார் -தேவ

ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும் ,
நேயன் வீட்டினில் சிறப்போடே ,
நெடு நாள் குடியாய் நிலைத்திருப்பேன் –தேவ

Arul Natha Nambi Vanthen அருள் நாதா நம்பி வந்தேன்

Arul Natha Nambi Vanthen

அருள் நாதா நம்பி வந்தேன்
நோக்கக் கடவீர்
கை மாறின்றி என்னை
முற்றும் ரட்சிப்பீர்

2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
திருப்பாதத்தில்
பாவ மன்னிப்பருள்வீர்
இந்நேரத்தில்

3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
உந்தன் ஆவியால்
சுத்தி செய்வீர் மாசில்லாத
ரத்தத்தால்

4. துணை வேண்டி நம்பி வந்தேன்
பாதை காட்டுவீர்
திருப்தி செய்து நித்தம்
நன்மை நல்குவீர்

5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்
ஞானம் பெலனும்
அக்னி நாவும் வல்ல வாக்கும்
ஈந்திடும்

6. இயேசு நாதா நம்பி
வந்தேன்தவறாமலே
என்னை என்றும் தாங்கி
நின்று காருமே

Vaanam Boomi Yaavatrilum வானம் பூமி யாவற்றிலும்

Vaanam Boomi Yaavatrilum

 1.         வானம் பூமி யாவற்றிலும்
                   யேசு மேலானவர்
            மனிதர், தூதர், பேய்தானும்
                        அவர் முன் வீழுவர்.
                     
            நான் நம்புவேன், நான் நம்புவேன்
                        யேசு எனக்காய் மரித்தார்,
            பாவம் நீங்கச் சிலுவையில்
                        உதிரம் சிந்தினார்.

2.         இரட்சகர் உயிர் விட்டதும்
                        எந்தனுக்காகவே;
            வெறெந்த மாமன் றாட்டுக்கும்
                        ஆங்கிட மில்லையே.

3.         பாவத்தின் மாளும் யாவர்க்கும்
                        உயிரளிக்குமே;
            பெலனற்ற ஆத்மாவுக்கும்
                        சக்தி கொடுக்குமே.

4.         லோகம் இவ்வன்பின் மாட்சிமை
                        ருசித்துப் பார்க்காதோ?
            மீட்ப ருதிர வல்லமை
                        வந்து சோதியாதோ?

5.         என் மரணப் படுக்கையில்
                        யேசென்ற நாமத்தை,
            பிரஸ்தாபிக்கும் சந்தோஷத்தில்
                        அடைவேன் நித்திரை.

Friday, 9 August 2019

Kiristhuvin Adaikalathil கிறிஸ்துவின் அடைக்கலத்தில்

Kiristhuvin Adaikalathil

கிறிஸ்துவின் அடைக்கலத்தில்
சிலுவையின் மாநிழலில்
கன்மலை வெடிப்பதனில்
புகலிடம் கண்டு கொண்டோம்

1. கர்ச்சிக்கும் சிங்கங்களும்
ஓநாயின் கூட்டங்களும்
ஆடிடைக் குடிலினில்
மந்தைகள் நடுவினில்
நெருங்கவும் முடியாது  --- நாம்

2. இரட்சிப்பின் கீதங்களும்
மகிழ்ச்சியின் சப்தங்களும்
கார்மேக இருட்டினில்
தீபமாய் இலங்கிடும்
கர்த்தரால் இசை வளரும்  --- நாம்

3. தேவனின் இராஜ்ஜியத்தை
திசை எங்கும் விரிவாக்கிடும்
ஆசையில் ஜெபித்திடும்
அதற்கென்றே வாழ்ந்திடும்
யாருக்கும் கலக்கம் இல்லை  --- நாம்

4. பொல்லோனின் பொறாமைகளும்
மறைவான சதி பலவும்
வல்லோனின் கரத்தினில்
வரை படமாயுள்ள
யாரையும் அணுகாது  --- நாம்


Tuesday, 6 August 2019

Devan Thantha Thiruch Sabaiyae தேவன் தந்த திருச் சபையே

Devan Thantha Thiruch Sabaiyae

தேவன் தந்த திருச் சபையே
விசுவாச வாழ்வு தரும் சபையே
மலரும் சந்தோஷம் ஒளிரும் நல்நேசம்
இன்றும் என்றும் அருளிச்செய்யும்

1. ஆதி அந்தம் வரையில்
நித்ய ஜீவன் நல்கும் மீட்பரை
நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
இந்த நல் தேவனின் திருச்சபையே

2. போற்றும் போற்றும் இயேசுவை
சுப வாழ்வு தரும் நேசரை
நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
இந்த நல் தேவனின் திருச் சபையே

3. மீண்டும் ஒர் நாள் வருவேன்
   என்று வாக்குரைத்த வல்லோனை
   நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
  விந்தைகள்  தேவனின்  திருச் சபையே