Tuesday, 23 July 2019

Vinthai Kiristhesu Raja விந்தை கிறிஸ்தேசு ராஜா

Vinthai Kiristhesu Raja

விந்தை கிறிஸ்தேசு ராஜா!
உந்தன் சிலுவையென் மேன்மை (2)

சுந்தரமிகும் இந்த பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை

1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் எனக்கிருப்பினும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமைகள் யாவும் அற்பமே – விந்தை

2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்தே மேன்மையாகினேன் – விந்தை

3. சென்னி, விலா, கை, கானின்று
சிந்துதோ துயரோடன்பு,
மன்னா இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை

4. இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் – விந்தை

Monday, 22 July 2019

Theeya Manathai Matra Varum தீய மனதை மாற்ற வாரும்

Theeya Manathai Matra Varum

தீய மனதை மாற்ற வாரும்,  தூய ஆவியே – கன
                                           நேய ஆவியே

1. மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் – மிக மாயும்
                       பாவி நான் – தீய

2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே – மருள்
                   தீர்க்கும், தஞ்சமே – தீய

3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா – ஒரு
                 பாவி நான் ஐயா – தீய

4. ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே – தினம்
                                இதயம் அஞ்சவே – தீய

5. புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே – அதைப்
                          புகழ்ந்து காக்கவே – தீய

6. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே – அவர்
                         கிருபை தேடவே – தீய

7. தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே – மிகு
                           தெளிவு வேண்டவே – தீய

8. ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப் போற்றவே – மிக
                              சிறப்பாய் ஏற்றவே – தீய

Paaviyaagave Vaaren பாவியாகவே வாறேன்

Paaviyaagave Vaaren

பாவியாகவே வாறேன்,
பாவம் போக்கும்  பலியாம்
என் யேசுவே, வாறேன்
பாவியாகவே வாறேன்

1.பாவக்கறை போமோ என்
பாடாய்? உன் பாடாலன்றிப்
போவதில்லை என்றே
பொல்லாத பாவியே நான்

2. நீ வா, உன் பாவம் என்னால்
நீங்கும் என்று சொன்னீரே;
தேவா, உன் வாக்கை நம்பி,
 சீர்கேடன் நீசனும் நான்

3. பேய்மருள் உலகுடல்
பேராசையால் மயங்கிப்
போயும் அவற்றோடு
போரில் அயர்ச்சியாய் நான்

4. ஜீவ செல்வ ஞான
சீல சுகங்கள் அற்றேன்,
தாவென்று வேண்டிய
சாவில் சஞ்சரித்த நான்

5. துன்பங்கள் நீக்கி உன்னை
   தூக்கி அணைப்பேன் என்றீர்
  இன்ப வாக்குத்தத்தத்தை 
  இன்றைக்கே நம்பியே நான்

6. உன்னைச் சேர ஒட்டாமல்
   ஊன்றிய தடை யாவும்
  உன்னன்பால் நீங்கி நல்
  உயிர் அடைந்தோங்கவே நான்

Saturday, 20 July 2019

Naan Paavi Thaan Aanaalum Neer நான் பாவிதான் ஆனாலும் நீர்


Naan Paavi Thaan Aanaalum Neer

1. நான் பாவிதான் – ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்;
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே, வந்தேன்.

2. நான் பாவிதான் – என் நெஞ்சிலே
கறை பிடித்துக் கெட்டேனே
என் கறை நீங்க இப்போதே,
என் மீட்பரே, வந்தேன்.

3. நான் பாவிதான் – மா பயத்தால்
திகைத்து, பாவபாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்,
என் மீட்பரே, வந்தேன்.

4. நான் பாவிதான் – மெய்யாயினும்
சீர், நேர்மை, செல்வம், மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே, வந்தேன்.

5. நான் பாவிதான் – இரங்குவீர்
அணைத்து, காத்து, ரட்சிப்பீர்,
அருளாம் செல்வம் அளிப்பீர்;
என் மீட்பரே, வந்தேன்.

6. நான் பாவிதான் – அன்பாக நீர்
நீங்கா தடைகள் நீக்கினீர்;
உமக்கு சொந்தம் ஆக்கினீர்;
என் மீட்பரே, வந்தேன்.

Friday, 19 July 2019

Neengaatha Paavam Neengaathatheno நீங்காத பாவம் நீங்காததேனோ

Neengaatha Paavam Neengaathatheno

நீங்காத பாவம் நீங்காததேனோ
 நீங்கிடும் நாள்தானிதோ
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்

காணாத ஆட்டை தேடி உன் நேசர்
கண்டுன்னை சேர்த்திடுவார்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்

என்பாவம் போக்கி என்னையும் மீட்டார்
உன்னையும் மீட்டிடுவார்
 பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
 வாவென்று அழைக்கிறார்

நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
எங்கு நீ சென்றிடுவாய்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
 வாவென்று அழைக்கிறார்

Wednesday, 17 July 2019

Paavaththin Paaraththinaal பாவத்தின் பாரத்தினால்

Paavaththin Paaraththinaal

பாவத்தின் பாரத்தினால்
தவித்திடும் பாவி என்னை
நின் கிருபை பிரவாகத்தால்
தேற்றிடும் ஏசு நாதா (2)

1. கெட்ட குமாரனைப் போல்
துஷ்டனாய் அலைந்தேன் அப்பா
நின் அன்பை உணராமல்
துரோகம் நான் செய்தேனே

2.கள்ளனாயினும் நான்
நீர் பெற்ற பிள்ளை அல்லோ
கள்ளனுக்கருள் செய்த நீ
தள்ளாதே சிலுவை நாதா

3.தந்தையை விட்ட பின்பு
தவிடு தான் ஆகாரமோ
மனம் கசிந்து நொந்தேன்
கண்ணீரை துடைத்திடுமே

4.தந்தை தாய் தாமரெல்லாம்
என்னைக் கைவிடுவார்கள்
சாகும் நாளில் தாங்குவார்
நீர் அல்லால் யாருமில்லை

Tuesday, 16 July 2019

Unnaiyae Veruththuvittaal உன்னையே வெறுத்துவிட்டால்

Unnaiyae Veruththuvittaal

உன்னையே வெறுத்துவிட்டால்
ஊழியம் செய்திடலாம்
சுயத்தை சாகடித்தால்
சுகமாய் வாழ்ந்திடலாம்

1. சிலுவை சுமப்பதனால்
சிந்தையே மாறிவிடும்
நீடிய பொறுமை வரும்
நிரந்தர அமைதிவரும்

2. பெயர் புகழ் எல்லாமே
இயேசுவின் நாமத்திற்கே
கிறிஸ்து வளரட்டுமே
நமது மறையட்டுமே

3. நாளைய தினம் குறித்து
கலங்காதே மகனே
இதுவரை காத்த தெய்வம்
இனியும் நடத்திடுவார்

4. சேர்த்து வைக்காதே
திருடன் பறித்திடுவான்
கொடுத்திடு கர்த்தருக்கே
குறைவின்றி காத்திடுவார்

5. தன்னலம் நோக்காமல்
 பிறர் நலம் தேடிடுவோம்
இயேசுவில் இருந்த சிந்தை
என்றுமே இருக்கட்டுமே