Friday, 12 July 2019

Maaridaathor Nesa Meetper மாறிடாதோர் நேச மீட்பர்

Maaridaathor Nesa Meetper

மாறிடாதோர் நேச மீட்பர்
மாற்றுவார் உன் வேதனை
பாவத்தாலும் நோயினாலும்
வருந்துவானேன் நம்பிவா
நம்பி வா நீ நம்பி வா
இயேசு உன்னை அழைக்கிறார்
நம்பி வா நீ நம்பி வா
இயேசு உன்னை அழைக்கிறார்

லோக மாந்தர் கைவிடுவார்
துரோகம் கூறி தூற்றுவார்
தூய இயேசு மெய் நேசமாய்
துன்பம் தீர்ப்பார் நம்பி வா
நம்பி வா நீ நம்பி வா
இயேசு உன்னை அழைக்கிறார்
நம்பி வா நீ நம்பி வா
இயேசு உன்னை அழைக்கிறார்

வல்ல மீட்பர் கண்ணீர் யாவும்
வற்றிப் போகச் செய்குவார்
வற்றா ஜீவ ஊற்றாய் உன்மேல்
என்றும் ஊறும் நம்பி வா
நம்பி வா நீ நம்பி வா
இயேசு உன்னை அழைக்கிறார்
நம்பி வா நீ நம்பி வா
இயேசு உன்னை அழைக்கிறார்

Yesuvai Pinpatrum Manithargal இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள்


Yesuvai Pinpatrum Manithargal

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்?
எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்
சரணங்கள்
1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வா
நயமாக அழைக்கிறார் வா - நீ வா
உலக மாமிச ஆசை
வீண் எனத் தள்ளி விட்டு வா வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா --- எந்தன்

2. எல்லாவற்றையும் விட்டு வா - நீ வா
எல்லாவற்றையும் விற்று வா - நீ வா
பிசாசின் வலையில் சிக்கி
பாழாய்ப் போய் விடாதே வா, வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா --- எந்தன்

3. ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா - நீ வா
உன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வா
இச்சையின் வலையில் நீ
சிக்கி விடாதே வா வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா --- எந்தன்

4. பின்பற்ற வருகிறேன் நான் - நானே
உம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் - நானே
இயேசுவே இறங்கிடும்
ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன்
இயேசுவைப் பின்பற்றுவேன் --- எந்தன்

Wednesday, 10 July 2019

Appa Pithaavae Anpaana Deva அப்பா பிதாவே அன்பான தேவா



Appa Pithaavae Anpaana Deva

அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே

1. எங்கோ நான் வாழ்ந்தேன்  அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர்
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறிவிட்டீர்

நன்றி உமக்கு நன்றி (2)

2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர்

நன்றி உமக்கு நன்றி (2)

3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே

நன்றி உமக்கு நன்றி (2)

4. இரவும் பகலும் ஐயா கூட இருந்து
எந்நாளும் காப்பவரே
மறவாத தெய்வம் மாறாத நேசர்
மகிமைக்குப் பாத்திரரே

நன்றி உமக்கு நன்றி (2)

Karththarukku Kaaththirunthu கர்த்தருக்கு காத்திருந்து




Karththarukku Kaaththirunthu

கர்த்தருக்கு காத்திருந்து
கழுகு போல் பெலனடைந்து
செட்டைகளை அடித்து
உயரே எழும்பிடுவாய்

புதுபெலன் அடைந்திடுவாய் – நீ
புதுபெலன் அடைந்திடுவாய்

1. தாகம் உள்ளவன் மேல்
ஆவியை ஊற்றிடுவார்
வறண்ட நிலத்தின் மேல்
தண்ணீரை ஊற்றிடுவார்

2. சர்ப்பங்களை எடுப்பாய்
தேள்களையும் மிதிப்பாய்
சத்ருவின் அதிகாரம்
சகலமும் மேற்கொள்வாய்

3. சாத்தானின் கோட்டைகளை
சத்தியத்தால் தகர்ப்பாய்
சிலுவையை சுமந்திடுவாய்
ஜெயக்கொடி ஏற்றிடுவாய்

4. கர்த்தரில் பெலனடையும்
பாக்கியம் பெற்றிடுவாய்
பெலத்தின் மேல் பெலனடைந்து
சீயோனுக்கு வருவாய்

Tuesday, 9 July 2019

Engalukkullae Vaasam Seiyum எங்களுக்குள்ளே வாசம் செய்யும்



எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா

ஆவியானவரே…ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே  (2)

1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத்தாரும் ஆவியானவரே(2)
வேதவசனம் புரிந்துகொண்டு
விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே (2)

2. கவலை கண்ணீர் மறக்கணும்..
கர்த்தரையே நோக்கணும்
கற்றுத் தாரும் ஆவியானவரே (2)
செய்த நன்மை நினைக்கணும்
நன்றியோடு துதிக்கணும்
சொல்லித் தாரும் ஆவியானவரே  (2)

3. எங்கு செல்ல வேண்டும்
என்ன சொல்ல வேண்டும்
வழிநடத்தும் ஆவியானவரே (2)
உம்விருப்பம் இல்லாத
இடங்களுக்கு செல்லாமல்
தடுத்து றிறுத்தும் ஆவியானவரே  (2)

4. எதிரிகளின் சூழ்ச்சிகள்
சாத்தானின் தீக்கணைகள்
எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே  (2)
உடல் சோர்வுகள் அசதிகள்
பெலவீனங்கள் நீங்கி
உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே  (2)

Monday, 8 July 2019

Yesuvai Naam Engae Kaanalaam இயேசுவை நாம் எங்கே காணலாம்



Yesuvai Naam Engae Kaanalaam

இயேசுவை நாம் எங்கே காணலாம்
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்

பனி படர்ந்த மலையின் மேல் பார்க்க முடியுமா?
கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமா?

1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே
ஆடுகின்ற அலை கடலில் நாடி அயர்ந்தேனே
தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே

2. வான மதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களே
வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
காலமெல்லாம் அவனியின் மேல் வீசிடும் காற்றே நீ
கர்த்தர் இயேசு வாழும் இடம் கூறிட மாட்டாயோ

3. கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறை முன்பாக
விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
கண் விழித்தேன் என் முன்னே கர்த்தர் இயேசு நின்றார்

Sunday, 7 July 2019

Nenjaththilae Thooimaiyundo நெஞ்சத்திலே தூய்மையுண்டோ


Nenjaththilae Thooimaiyundo

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
இயேசு வருகிறார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்

1 வருந்தி சுமக்கும் பாவம்
 உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும்
 செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும்
அவர் பாதம் வந்து சேரும்

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
இயேசு வருகிறார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்

 2 குருதி சிந்தும் நெஞ்சம்
உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும்
அவர் பாதம் வந்து சேரும்

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
இயேசு வருகிறார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்