Sunday, 2 June 2019

Seer Yesu Naathanukku சீர் இயேசு நாதனுக்கு

Seer Yesu Nathanukku
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர் இயேசு
ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சீர் இயேசு
மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு – சீர் இயேசு
பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு – சீர் இயேசு

Thothira Paathirane Deva தோத்திர பாத்திரனே தேவா

Thothira Paathirane Deva
தோத்திர பாத்திரனே, தேவா,
தோத்திரந் துதியுமக்கே!
நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்
நித்தியம் துதியுமக்கே!

சரணங்கள்

1. சத்துரு பயங்களின்றி – நல்ல
நித்திரை செய்ய எமை
பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே
சுற்றிலுங் கோட்டையானாய் — தோத்திர

2. விடிந்திருள் ஏகும்வரை – கண்ணின்
விழிகளை மூடாமல்,
துடி கொள் தாய்போல் படிமிசை எமது
துணை எனக் காத்தவனே — தோத்திர

3. காரிருள் அகன்றிடவே – நல்ல
கதிரொளி திகழ்ந்திடவே,
பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகன
பாங்கு சீராக்கி வைத்தாய் — தோத்திர

4. இன்றைத் தினமிதிலும் – தொழில்
எந்தெந்த வகைகளிலும்
உன் திறுமறைப்படி ஒழுகிட எமக்கருள்
ஊன்றியே காத்துக் கொள்வாய் — தோத்திர

Ulagum Vaanum Seithaalum உலகும் வானும் செய்தாளும்

Ulagum Vaanum Seithaalum

உலகும் வானும் செய்தாளும் ஒப்பில் சர்வ வல்லவராய்
இலகுமருளாம் தந்தையாம் எம்பிரான்றனை நம்புகிறேன்

அவரொரு பேறாமைந்தனுமாய் ஆதிமுதலெங்கர்த்தனு மாய்த்
தவறிலேசு க்கிறிஸ்துவையும் சந்ததமே யான் நம்புகிறேன்

பரிசுத்தாவி அருளதனால் படிமேல் கன்னிமரியிடமாய்
உருவாய் நரரவதாரமதாய் உதித்தாரெனவும் நம்புகிறேன்

பொந்துபிலாத்ததி பதினாளில் புகலருபாடுகளையேற்று
உந்துஞ்  சிலுவையறையுண்டு உயிர்விட்டாரென  நம்புகிறேன்

இறந்தே அடங்கிப்  பாதாளம்  இறங்கி மூன்றாம் தினமதிலெ
இறந்தோரிட நின்றே உயிரொடெ ளுந்தாரெனவும்  நம்புகிறேன்

சந்தத மோட்சம் எளுந்தருளிச் சருவவல்ல பரனான
எந்தை தன்வலப் பாரிசமே யிருக்கிறாரென நம்புகிறேன்

உயிருள்ளோரை மரித்தோரை உத்தமஞாயந்  தீர்த்திடவே
ஜெயமாய்த்  திரும்பவருவாரெனச் சிந்தையார  நம்புகிறேன்

பரிசுத்தாவியை நம்புகிறேன் பரிசுத்த மாபொதுச்சபையும்
பரிசுத்தர்களின் ஐக்கியமும்  பரிவாயுண்டென நம்புகிறேன்

பாவமன்னிப்புளதெனவும் மரித்தோருயிர்த் தெளுவாரெனவும்
ஒவாநித்ய ஜீவனுமே உளதெனவும் யான் நம்புகிறேன்

Deva kirubai Entumullathae தேவ கிருபை என்றுமுள்ளதே

Deva kirubai Entumullathae
தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்

1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது

2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன்
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே

5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே

6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே

Enthan Yesuvae Unthan Nesamae எந்தன் இயேசுவே உந்தன் நேசமே

Enthan Yesuvae Unthan Nesamae
எந்தன் இயேசுவே உந்தன் நேசமே
எந்தன் உள்ளம் உருகிடுதே
நல்ல பங்கினை நான் அடைந்தேன்
திருப்பாதம் வல்ல பராபரனே சரணம்

அந்த மாது கண்களின் நீரை
அன்பரே உம் பாதம் ஊற்றினாளே
என் இதயமே தைலக்குப்பியே
என்னை நொறுக்கி ஒப்படைத்தேன்

நன்றி என்றும் நான் மறவேனே
நம்பிக்கை கன்மலை என் இறைவா
எந்தன் துணை நீர் என்னை அறிவீர்
எந்தன் பாரம் தாங்கிடுவீர்

கேட்டதெல்லாம் அன்புடன் ஈந்தீர்
கூப்பிடும் வேளை செவிசாய்த்தீர்
இந்த உதவி என்றும் மறவேன்
இன்ப துதிகள் ஏறெடுப்பேன்

எந்தன் மேன்மை சிலுவையல்லாமல்
ஏதுமில்லை இந்தப் பாரினிலே
உந்தனுடனே என்னை அறைந்தேன்
உந்தன் குருசில் பங்கடைந்தேன்

இலக்கை நோக்கி ஓடுகின்றேனே
இலாபமும் நஷ்டமென்றெண்ணுகின்றேன்
ஒன்றே மனதில் உண்டு நினைவில்
சென்றே பரனைக் கண்டிடுவேன்

Apposthalar Visuvasapiramanam அப்போஸ்தலர் விசுவாசப்பிரமாணம்

Apposthalar Visuvasapiramanam  அப்போஸ்தலர் விசுவாசப்பிரமாணம்

வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்:
அவருடைய குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசுகிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, பாதாளத்தில் இறங்கினார்: மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார்: பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்; அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன், பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும்; பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும்; பாவ மன்னிப்பும்; சரீரம் உயிர்த்தெழுதலும்; நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன். ஆமென்.

Antho kalvariyil அந்தோ கல்வாரியில்

Antho kalvariyil
அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்கினார்

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாயலோகத்தோ டழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே

அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே

முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரையும் மீட்டிடவே

அதிசயம் இது இயேசுவின் நாமம்
அதினும் இன்பம் அன்பரின் தியானம்
அதை எண்ணியே நிதம் வாழ்வேன்
அவர் பாதையே நான் தொடர்ந்தேகிடவே

சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்ந்திட வருவே னென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்