Sunday, 2 June 2019

Kolkatha Maettinile கொல்கதா மேட்டினிலே

Kolkatha Maettinile

1.கொல்கதா மேட்டினிலே
கொடூர பாவி எந்தனுக்காய்
குற்றமில்லாத தேவ குமாரன்
குருதி வடிந்தே தொங்கினார்

2.கல்வாரி காட்சி இதோ
கண்டிடுவாயே கண்கலங்க
கடின மனமும் உருகிடுமே
கர்த்தரின் மாறாத அன்பினிலே

3.பாவ சாபங்கள் சுமந்தாரே
பாவியை மீட்க பாடுபட்டார்
பாவமில்லாத தேவகுமாரன்
பாதகன் எனக்காய் தொங்கினார்

4.உள்ளமே நீ திறவாயோ
உருகும் சத்தம் நீ கேளாயோ
உன் கரம் பற்றி உன்னை நடத்த
உன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்

Siluvai Sumantha Uruvam சிலுவை சுமந்த உருவம்

Siluvai Sumantha Uruvam
சிலுவை சுமந்த உருவம்
சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதிபோலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா
1. பொல்லா உலக சிற்றின்பங்கள்
எல்லாம் அழியும் மாயை
காணாய் நிலையான சந்தோஷம்
பூவில் கர்த்தாவின் அன்பண்டைவா — சிலுவை
2. பாவ மனித ஜாதிகளைப்
பாசமாய் மீட்க வந்தார்
பாவப் பரிகாரி கர்த்தர் இயேசுநாதர்
பாவமெல்லாம் சுமந்தார் — சிலுவை
3. தாகமடைந்தோர் எல்லோருமே
தாகத்தை தீர்க்க வாரும்
ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர்
ஜீவன் உனக்களிப்பார் — சிலுவை

Maanida Uruvil Avathariththa மானிட உருவில் அவதரித்த

Maanida Uruvil Avathariththa
மானிட உருவில் அவதரித்த
மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே

1. ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த
அவனியிலே உனக்காய் உதித்தார்
அண்டி வருவாய் வேண்டி அடைவாய்
அண்ணலே ஆத்தும வினை நீக்குவார்

2. கூவி அழைப்பது தேவ சத்தம்
குருசில் வடிவது தூய இரத்தம்
பாவ மன்னிப்பு ஆத்தும இரட்சிப்பு
பாக்கியம் நல்கிட அவரே வழி

3. இயேசுவின் நாமத்தின் வல்லமையே
இதை நாடுவோர்க்கு விடுதலையே
துன்ப கட்டுகள் காவல் சிறைகள்
இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா

4. அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்
அதிசயங்கள் அவர் காட்டிடுவார்
உண்மை நிறைந்த உள்ளம் திறந்து
உன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய்

5. கர்த்தர் உன்னை இனி கைவிடாரே
கடைசிவரை தளராதே நம்பு
என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர்
இயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார்

En Arul Natha Yesuvae என் அருள் நாதா இயேசுவே

En Arul Natha Yesuvae
1. என் அருள் நாதா, இயேசுவே
சிலுவை காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை நஷ்டமே
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்

2. என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறெதை நான் பாராட்டுவேன்
சிற்றின்பம் யாவும் அதினால்
தகாததென்று தள்ளுவேன்

3. கை தலை காலிலும் இதோ
பேரன்பும் துன்பும் கலந்தே
பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ?
முள் முடியும் ஒப்பற்றதே

4. சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம்

5. மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்
சம்பாதித்தீந்த இயேசுவே
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டாகவே

Deva Paalan Pirantheerae தேவ பாலன் பிறந்தீரே

Deva Paalan Pirantheerae
தேவ பாலன் பிறந்தீரே
மனுக்கோலம் எடுத்தீரே
வானலோகம் துறந்தீர் இயேசுவே
நீர் வாழ்க வாழ்கவே

1. மண் மீதினில் மாண்புடனே
மகிமையாய் உதித்த மன்னவனே
வாழ்த்திடுவோம், வணங்கிடுவோம்
தூயா உம் நாமத்தையே

2. பாவிகளை ஏற்றிடவே
பாரினில் உதித்த பரிசுத்தனே
பாடிடுவோம், புகழ்ந்திடுவோம்
தூயா உம் நாமத்தையே

Athikalayil Palanai Thedi அதிகாலையில் பாலனை தேடி

Athikalayil Palanai Thedi
அதிகாலையில் பாலனை தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாட்டையும் குடில் நாடி
தேவ பாலனை பணிந்திட வாரீர்
வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்

1. அன்னைமா மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க — அதி

2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த மன்னவன் முன்னிலை நின்றே
தம் கந்தை குளிர்ந்திட போற்றும்
நல்ல காட்சியை கண்டிட வாரீர் — அதி

Enthan yesu Enakku Nallavar எந்தன் இயேசு எனக்கு நல்லவர்

Enthan yesu Enakku Nallavar

எந்தன் இயேசு எனக்கு நல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்
ஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில்
அவர் என்றுமே போதுமானவர்

கல்வாரி மலைமேல் ஏறியே
முள் முடி சிரசில் சூடியே
என் வேதனை யாவையும் நீக்கி என்னில்
புது ஜீவனை ஊற்றினதால்

அவர் ஆதியும் அந்தமுமே
தெய்வ சிநேகத்தின் பிறப்பிடமே
பதினாயிரங்களில் மிக சிறந்தவரை
துதிக்கப் படத்தக்கவரே

புவி யாத்திரை மிகக் கடினம்
தேவ கிருபைகள் எந்நேரமும்
பகல் மேகஸ்தம்பம் ராவில் அக்கினிஸ்தம்பம்
அனுதினம் என்னை வழி நடத்தும்

எந்தன் ஏக்கம் எல்லாம் நீங்கிப்போம்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்
இயேசு இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள்
நான் அவருடன் பறந்திடுவேன்