Sunday, 2 June 2019

karththarai Nambiyae Jeevippom கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்

karththarai Nambiyae Jeevippom

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றி கொள்வோம்

ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளிதனை கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும்

உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன் மீது வைத்திடுவார்
கருத்தாய் காத்திடுவார்

உள்ளமதின் பாரங்கள்
ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார்

அன்புமிகும் அண்ணலிவர்
அருமை இயேசுவை நெருங்குவோம்
தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே
தாங்கி அணைத்திடுவார்

நீதிமானின் சிரசின் மேல்
நித்திய ஆசிர் வந்திறங்குமே
கிருபை நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே

Varuvai Tharunam Ithuvae வருவாய் தருணமிதுவே

Varuvai Tharunam Ithuvae

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை

வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார்

கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவீட்டு உன் ஆவிபோனால்
கூட உனோடு வருவதில்லை

அழகு மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர்நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை

வானத்தின் கீழே பூமி மேலே
வானவர் இயேசு நாமமல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே

தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்
கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களல் நீ குணமடைய

சத்திய வாக்கை நம்பியே வார்
நித்திய ஜீவன் உனக்களிப்பார்
உன் பேரை ஜீவ புஸ்தகத்தில்
உண்மையாய் இன்று எழுதிடுவார்

Thanthaen Ennai Yesuvae தந்தேன் என்னை இயேசுவே

Thanthaen  Ennai Yesuvae
தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே
உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும்

1. ஜீவகாலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
பூவில் கடும் போர்புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து

2. உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன்

3. உந்தன் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன்

4. கஷ்டம், நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடி சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும்

5. ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீஷர்க்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும்

Antha naal inba inba inba naal அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்


Antha Naal Inpa Inpa Inpa Naal
அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்
எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

1. இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே
சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள்
விரைவுடன் ஓடிவா விண்ணிலே சேரவே
வேகமாய் வேகமாய் வேகமாய்

2. கஷ்டம் நஷ்டம் பட்டப்பாடு பறந்து போகுமே
பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமே
வாதை நோய் துன்பமும் வருத்தங்கள் யாவுமே
நீங்குமே நீங்குமே நீங்குமே

3. ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டுப் பாடுவார்
பரவசங்கள் சூழ்ந்து மிக ஆட்டம் ஆடுவார்
ஆனந்தம் என்றுமே ஆர்ப்பரிப்போம் அவரையே
மகிழுவோம் மகிழுவோம் மகிழுவோம்

4. புதிய வானம் புதிய பூமி தோன்றும் நாளிலே
நித்திய காலம் நாமும் அங்கே வாழ்வோமென்றுமே
தூதர்கள் யாவரும் சேவைகள் புரிவாரே
என்றுமே என்றுமே என்றென்றுமே

5. பாவமற்ற பரிசுத்தரின் ராஜ்யமதிலே
பாலர்கள் போல நாமும் பார்க்கப்படுவோமே
பாலுடன் தேனுமாய்ப் பழரசம் பாங்குடன்
பருகுவோம் பருகுவோம் பருகுவோம்

Thuthi Ganam Magimai Ellam துதி கனம் மகிமை எல்லாம்


Thuthi Ganam Magimai Ellam
துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு ராஜாவுக்கே  (2)

தூதர்களே துதியுங்கள்
தூதசேனையே துதியுங்கள்
சூரிய சந்திரரே துதியுங்கள்
பிரகாச நட்சத்திரமே துதியுங்கள்

வானாதி வானங்களே துதியுங்கள்
ஆகாய மண்டலமே துதியுங்கள்
தண்ணீர் ஆழங்களே துதியுங்கள்
பூமியிலுள்ளவையே துதியுங்கள்

அக்கினி கல்மழையே துதியுங்கள்
மூடுபனி பெருங்காற்றே  துதியுங்கள்
மலைகள் மேடுகளே துதியுங்கள்
பறவை பிராணிகளே துதியுங்கள்

வாலிபர் கன்னியரே துதியுங்கள்
பெரியோர் முதியோரே துதியுங்கள்
பிள்ளைகளே மகிழ்ந்து துதியுங்கள்- நாம்
இயேசுவை என்றுமே துதித்திடுவோம்

Saturday, 1 June 2019

Paralogamae en sonthamae பரலோகமே என் சொந்தமே



Paralogamae en sonthamae

பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
என் இன்ப இயேசுவை
நான் என்று காண்பேனோ

வருத்தம் பசி தாகம்
மனத்துயரம் அங்கே இல்லை
விண் கிரீடம் வாஞ்சிப்பேன்
விண்ணவர் பாதம் சேர்வேன்

சிலுவையில் அறையுண்டேன்
இனி நானல்ல இயேசுவே
அவரின் மகிமையே
எனது இலட்சியமே

இயேசு என் நம்பிக்கையாம்
இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன்
இயேசுவைப் பின்பற்றுவேன்

ஓட்டத்தை ஜெயமுடன்
நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாச பாதயில்
சோராது ஓடிடுவேன்

பரம சுகம் காண்பேன்
பரம தேசம் அதில் சேர்வேன்
ராப்பகல் இல்லையே
இரட்சகர் வெளிச்சமே

அழைப்பின் சத்தம் கேட்டு
நானும் ஆயத்தமாகிடுவேன்
 நாட்களும் நெருங்குதே
 வாஞ்சையும் பெருகுதே

பளிங்கு நதியோரம்
சுத்தர் தாகம் தீர்த்திடுவார்
 தூதர்கள்  பாடிட
  தூயனை தரிசிப்பேன்

Karthave Yuga Yugamai கர்த்தாவே யுகயுகமாய்



Karthave Yuga Yugamai
1. கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்

2. உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்

3. பூலோகம் உருவாகியே
மலைகள் தோன்றுமுன்
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்

4. ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே

5. சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்

6. கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
இக்கட்டில் நற் சகாயராய்
எம் நித்திய வீடாவீர்