Saturday, 1 June 2019

Paralogamae en sonthamae பரலோகமே என் சொந்தமே



Paralogamae en sonthamae

பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
என் இன்ப இயேசுவை
நான் என்று காண்பேனோ

வருத்தம் பசி தாகம்
மனத்துயரம் அங்கே இல்லை
விண் கிரீடம் வாஞ்சிப்பேன்
விண்ணவர் பாதம் சேர்வேன்

சிலுவையில் அறையுண்டேன்
இனி நானல்ல இயேசுவே
அவரின் மகிமையே
எனது இலட்சியமே

இயேசு என் நம்பிக்கையாம்
இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன்
இயேசுவைப் பின்பற்றுவேன்

ஓட்டத்தை ஜெயமுடன்
நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாச பாதயில்
சோராது ஓடிடுவேன்

பரம சுகம் காண்பேன்
பரம தேசம் அதில் சேர்வேன்
ராப்பகல் இல்லையே
இரட்சகர் வெளிச்சமே

அழைப்பின் சத்தம் கேட்டு
நானும் ஆயத்தமாகிடுவேன்
 நாட்களும் நெருங்குதே
 வாஞ்சையும் பெருகுதே

பளிங்கு நதியோரம்
சுத்தர் தாகம் தீர்த்திடுவார்
 தூதர்கள்  பாடிட
  தூயனை தரிசிப்பேன்

Karthave Yuga Yugamai கர்த்தாவே யுகயுகமாய்



Karthave Yuga Yugamai
1. கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்

2. உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்

3. பூலோகம் உருவாகியே
மலைகள் தோன்றுமுன்
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்

4. ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே

5. சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்

6. கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
இக்கட்டில் நற் சகாயராய்
எம் நித்திய வீடாவீர்

Enthan kanmalai Aanavarae எந்தன் கன்மலையானவரே



Enthan Kanmalai Aanavare
எந்தன் கன்மலையானவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே-2
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே-2

ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே-2

1. உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்-2
தூயவரே என் துணையாளரே
துதிக்கு பாத்திரரே-2— ஆராதனை

2. எந்தன் பலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீர் ஐயா-2
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே-2— ஆராதனை

3. எந்தன் உயிருள்ள நாட்கள்எல்லாம்
உம்மை புகழுந்து பாடிடுவேன்-2
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன் — ஆராதனை

Kattadam kattidum Sirpigal கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்



Kattadam kattidum sirpigal
கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்
சுத்தியல் வைத்து அடித்தல்ல
ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல - கட்டடம்

1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம் 
ஒவ்வொரு செயலாம் கற்களாலே
உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்
பத்திரமாக தாங்கிடுவார்  -- கட்டடம்

2. கைவேலை அல்லா வீடொன்றை
கடவுளின் பூரண சித்தப்படி
கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்
கட்டிடுவோமே நித்தியத்திற்காய்  --  கட்டடம்

3. பாவமாம் மணலில் கட்டப்பட்ட
பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே – ஆவலாய்
இயேசுவின் வார்த்தைக் கேட்போம்
அவரே மூலைக்கல் ஆகிடுவார்  -- கட்டடம்

Deva Senai Vaanameethu தேவசேனை வானமீது



Deva Senai Vaanameethu Kodi Kodiyaga Thondrum
1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்
பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும்
விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்

அல்லேலூயா , அல்லேலூயா – ( 4 )

2. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்
இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும்
தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்

அல்லேலூயா , அல்லேலூயா – ( 4 )

3. கடல் குமுறும் கரை உடையும் கப்பல் கவிழும் பெரும் நாசம்
போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை
வாக்குமாறா வேதம் கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும்
நானோ ஆடி மிகப்பாடி என்நேசருடன் சேர்வேன்

அல்லேலூயா , அல்லேலூயா – ( 4 )

Deva Naan Ethinal Viseshithavan தேவா நான் எதினால் விசேஷித்தவன்



Deva Naan Ethinal Viseshithavan
தேவா நான் எதினால் விசேஷித்தவன்
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்

எதினால் இது எதினால் -2
நீர் என்னோடு வருவதினால்

1. மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதை காட்ட பகலெல்லாம் கூடச் செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அது போதும் என் வாழ்விலே

2. தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது
என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன்

3. வாழ்க்கையில் கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
மாராவின் நீரை தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு

Sthothiram Padiyae Potriduven ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்



Sthothiram Paadiye Potriduven
ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்

1. அற்புதமான அன்பே – என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே – ஸ்தோத்திரம்

2. ஜோதியாய் வந்த அன்பே – பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்விய மதுர அன்பே – ஸ்தோத்திரம்

3. மாய உலக அன்பை – நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே – ஸ்தோத்திரம்

4. ஆதரவான அன்பே – நித்தம்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னதமான  தேவ அன்பே
உள்ளங் கவரும் அன்பே – ஸ்தோத்திரம்

5. வாக்கு மாறாத அன்பே – திரு
வார்த்தை உரைத்தென்னைத் தேற்றும் அன்பே
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே – ஸ்தோத்திரம்