Saturday, 1 June 2019

Magilvom Magilvom மகிழ்வோம் மகிழ்வோம்



Magilvom Magilvom
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே – இந்த

2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டுக்கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்

3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்

4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

Potrum Potrum போற்றும், போற்றும்




Potrum Potrum Punniya Naadarai

1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,
பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;
மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.
நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு
இயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;
போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்!
பாதுகாத்து நித்தமும் போஷிப்பார்.

2. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்;
பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்து
வானலோக வாசலைத் திறந்தார்.
மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்!
வாழ்க, வாழ்க, ஜெகத்து ரட்சகா!
அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி,
வல்லநாதா, கருணை நாயகா!

3. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும்;
போற்றும், போற்றும், மீட்பர் மகத்துவமாக
ஆட்சிசெய்வார் நித்திய காலமும்;
ஏக ராஜா, மாட்சிமையோடு வந்து,
இயேசு ஸ்வாமி, பூமியில் ஆளுமேன்;
லோகம் எங்கும் நீதியின் செங்கோலை ஓச்சி
ஜோதியாகப் பாலனம் பண்ணுமேன்.

Endhan Ullam Pudhu Kavi Yaale Ponga எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க




Endhan Ullam Pudhu Kavi Yaale Ponga

எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க
இயேசுவை பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்
                             பல்லவி
அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்
அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தரைக் கொண்டாடுவேன்
1. சென்ற காலம் முழுவதும் காத்தாரே – ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
சுக பெலன் அளித்தாரே – அல்லேலூயா
2. சில வேளை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே – அல்லேலூயா
3. பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே – அல்லேலூயா
4. களிப்போடு விரைந்தேம்மை சேர்த்திட – என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினமும் காத்திருப்போம் – அல்லேலூ

Avar Enthan sangeethamaanavar அவர் எந்தன் சங்கீதமானவர்




Avar Endhan Sangeetham Anavar
அவர்  எந்தன் சங்கீதமானவர்
அரணான கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான அவரை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்

1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே

2. இரண்டு மூன்று பேரெந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
இருப்பேன் என்றவர் நமது தேவன்
இருகரம் தட்டி என்றும் துதித்திடுவோம்

3. வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை
வாழ்நாள் முழுவதும் கூறிடுவோம்
வருகையில் இயேசுவோடு இணைந்து என்றும்
வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம்

En Yesu Rajavkkae என் இயேசு ராஜாவுக்கே




En yesu rajavukke

என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்

கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
நித்தமும் நினைக்கிறேன்
முழு உள்ளத்தோடு உம் நாமம்
பாடிப் புகழுவேன் – நான்

நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நேசர் நீர் அணைத்தீரே
கைவிடப்பட்டு கதறினேன்
கர்த்தர் நீர் தேற்றினீர்

இனி நான் வாழ்வது உமக்காக
உமது மகிமைக்காக
உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்
ஓயாமல் பாடுவேன் – நான்

பாவங்கள் அணைத்தும் மன்னித்தீரே
நோய்களை சுகமாக்கினீர்
எனது ஜீவனை அழிவில் நின்று
காத்து இரட்சித்தீரே

Friday, 31 May 2019

Thaaveethai Pola Nadanamaadi தாவீதைப் போல நடனமாடி





Thaaveethai Pola Nadanamaadi
தாவீதைப் போல நடனமாடி
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
இயேசப்பா ஸ்தோத்திரம் – 4

1. என்ன வந்தாலும் எது நடந்தாலும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – தாவீதை
இயேசப்பா ஸ்தோத்திரம் (4)
2. கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – தாவீதை
இயேசப்பா ஸ்தோத்திரம் (4)
3. பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – தாவீதை
இயேசப்பா ஸ்தோத்திரம் (4)
4. ஆவியினாலே அபிஷேகம் செய்த
அப்பாவை ஸ்தோத்தாப்பேன் – தாவீதை
இயேசப்பா ஸ்தோத்திரம் (4)
5. கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்  – தாவீதை
இயேசப்பா ஸ்தோத்திரம் (4)

Thuthippathey en thaguthiyallo துதிப்பதே என் தகுதியல்லோ




Thuthippathey en thaguthiyallo
துதிப்பதே என் தகுதியல்லோ
துதித்திடுவேன் என் இயேசுவை
1.  வேதம் நிறைந்த இதயம் தந்தார்
ஜெபம் நிறைந்த நேரம் தந்தார்
கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்
கருணை நிறைந்த கரங்கள் தந்தார்
 துதிப்பதே என் தகுதியல்லோ
துதித்திடுவேன் என் இயேசுவை
 2. வியாதி நேரத்தில் வல்லமை தந்தார்
சோதனை நேரத்தில் ஜெயம் தந்தார்
கைவிட்ட நேரத்தில் ஜீவன் தந்தார்
ஆரோக்கிய நேரத்தில் அடைக்கலம் தந்தார்
துதிப்பதே என் தகுதியல்லோ
துதித்திடுவேன் என் இயேசுவை
3.  மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்
பார்வை நிறைந்த தூய்மை தந்தார்
 சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்
செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார்
துதிப்பதே என் தகுதியல்லோ
துதித்திடுவேன் என் இயேசுவை
4 . ஆபத்து நேரத்தில் அடைக்கலம் தந்தார்
 பெலவீன நேரத்தில் பெலன் தந்தார்
 செய்தி நேரத்தில் தூது தந்தார்
பாடிய நேரத்தில் பரவசம் தந்தார்
 துதிப்பதே என் தகுதியல்லோ
துதித்திடுவேன் என் இயேசுவை
5. வளம் நிறைந்த வாழ்வு தந்தார்
மகிமை நிறைந்த தாழ்மை தந்தார்
அன்பு நிறைந்த ஆட்கள் தந்தார்
ஆவி நிறைந்த அறிவு தந்தார்
துதிப்பதே என் தகுதியல்லோ
துதித்திடுவேன் என் இயேசுவை
 6. சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார்
சத்தியம் நிறைந்த சபை தந்தார்
 இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார்
ஒளி நிறைந்த வழி திறந்தார்
துதிப்பதே என் தகுதியல்லோ
துதித்திடுவேன் என் இயேசுவை