Friday, 31 May 2019

Saruva Logathiba Namaskaram சருவ லோகாதிபா, நமஸ்காரம்




Saruva Logathiba Namaskaram
1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்
தரை, கடல், உயிர்,
வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்

2. திரு அவதாரா, நமஸ்காரம்
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்
தரணியில் மனுடர்
உயிர் அடைந்தோங்கத்
தருவினில் மாண்டோர் நமஸ்காரம்

3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்
பரம சற்குருவே, நமஸ்காரம்
அரூபியாய் அடியார்
அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்

4. முத்தொழிலோனே, நமஸ்காரம்
மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்
கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
நித்திய திரியேகா, நமஸ்காரம்

Paadi Thuthi Manamae பாடித் துதி மனமே





Paadi Thuthi Maname

பாடித் துதி மனமே, பரனைக்
கொண்டாடித் துதி தினமே

                அனுபல்லவி
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப்- பாடி

                           சரணங்கள்
தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவ பரன் இந்த காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்து – பாடி

2. சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தரம் எமை
மந்தையில் சேர்த்து பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷ த்துக்காக – பாடி

3. எத்தனை தீர்க்கர், அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள், இரத்த சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் – பாடி

Aththumamae En Mulu Ullamae ஆத்துமமே என் முழு உள்ளமே



Aththumamae En Mulu Ullamae
ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்
ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த – உன்
ஆண்டவரைத் தொழுதேத்து

                          சரணங்கள்

1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே

2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே

3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும், மேலான – ஆத்துமமே

4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்த – ஆத்துமமே

5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் – ஆத்துமமே

6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே, உள்ளமே, என் மனமே – ஆத்துமமே

Yesuvaiye Thuthi Sei ஏசுவையே துதிசெய்




Yesuvaiye thuthi sei

ஏசுவையே துதிசெய் நீ மனமே
ஏசுவையே துதிசெய் – கிறிஸ்தேசுவையே

மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து

அந்தரவான் தரையுந்தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தராநந்தன்

எண்ணின காரியம் யாவும் முடிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க

Deva Devanai Thuthithiduvom தேவ தேவனைத் துதித்திடுவோம்




Deva Devanai Thuthithiduvom

தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒருமனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்தி போற்றிடுவோம்

அல்லேலுயா தேவனுக்கே அல்லேலுயா கர்த்தருக்கே
அல்லேலுயா பரிசுத்தருக்கே அல்லேலுயா ராஜனுக்கே

1. எங்கள் காலடி வழுவிடாமல்
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
கண்மணி போல காத்தருளும்
கிருபையால் நிதம் வழிநடத்தும்

2. சபையில் உம்மை அழைத்திடுவோம்
சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம்
சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம்
சாகும் வரையில் உழைத்திடுவோம்

3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடவே
வேத வசனம் கீழ்படிவோம்
தேவ சாயலாய் மாறிடுவோம்

4. வானத்தில் அடையாளம் தோன்றிடுமே
இயேசு மேகத்தில் வந்திடுவார்
நாமும் அவருடன் சேர்ந்திடவே
நம்மை ஆயத்தமாக்கி கொள்வோம்

huthi Thangiya Paramandala துதி தங்கிய பரமண்டல




Thuthi Thangiya Paramandala 
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!

சரணங்கள்

1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,
கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் — துதி

2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் — துதி

3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார்,
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் — துதி

4. ஆபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்,
எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன் — துதி

5. சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்,
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் — துதி

6. விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன்,
பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் — துதி

Thuthithu Paadida Paaththiramae துதித்துப் பாடிட பாத்திரமே




Thuthithu Paadida Paaththiramae
1. துதித்துப் பாடிட பாத்திரமே
துங்கவன் இயேசுவின் நாமமதே
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே

ஆ! அற்புதமே அவர் நடத்துதலே
ஆனந்தமே பரமானந்தமே
நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

2. கடந்த நாட்களில் கண்மணிபோல்
கருத்துடன் நம்மைக் காத்தாரே
கர்த்தரையே நம்பி ஜீவித்திட
கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே

3. அக்கினி ஊடாய் நடந்தாலும்
ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும்
சோதனையோ மிகப் பெருகினாலும்
ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே

4. இந்த வனாந்திர யாத்திரையில்
இன்பராம் இயேசு நம்மோடிருப்பார்
போகையிலும் நம் வருகையிலும்
புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே

5. வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார்
வாரும் என்றே நாம் அழைத்திடுவோம்
வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள்
விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே