Friday, 31 May 2019

Anantha Thuthi Oli Ketkum ஆனந்த துதி ஒலி கேட்கும்




Anantha Thuthi Oli Ketkum
ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் — ஆ… ஆ…

1. மகிமைப்படுத்து வேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு — ஆ… ஆ…

2. ஆதி நிலை எகுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோம்
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் — ஆ… ஆ…

3. விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் — ஆ… ஆ…

4. யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார் — ஆ… ஆ…

Sthothiram Yesu Natha ஸ்தோத்திரம் இயேசு நாதா



Sthothiram Yesu Nadha
1. ஸ்தோத்திரம் இயேசு நாதா
உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்!

2. வான துதர் சேனைகள்
மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு!

3. இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்!

4. நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவப் புது வழியாம்
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்!

5. இன்றைத் தினமதிலும்
ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே!

6. நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே!

Alleluyah Kartharaiyae அல்லேலூயா கர்த்தரையே




Alleluyah  Kartharaiyae
1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்

பல்லவி
இராஜாதி இராஜனாம் இயேசுராஜன்
பூமியில் ஆட்சி செய்வார்
அல்லேலுயா அல்லேலுயா
தேவனைத் துதியுங்கள்

2. தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் , கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள்

3. சூரியனே , சந்திரனே தேவனைத் துதியுங்கள்
ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
அக்கினியே , கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்
அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள்

4. பிள்ளைகளே , வாலிபரே தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
பெரியவரே , பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள்

5. ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள்

Sthothiram Thuthi Pathira ஸ்தோத்திரம் துதி பாத்திரா



Sthothiram Thuthi Pathira Ummai
ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்

காத்தீரே என்னைக் கருத்தாக
வழுவாமல் என்னை உமக்காக
எடுத்தீர் எனையும் உமக்காக
கொடுத்தீர் உமையும் எனக்காக

1. வல்ல வான ஞான வினோதா
துதியே துதியே துதித்திடுவேன்
எல்லாக் குறையும் தீர்த்தீரே
தொல்லை யாவும் தொலைத்தீரே
அல்லல் யாவும் அறுத்தீரே
அலையும் எனையும் மீட்டீரே

2. நம்பினோரைக் காக்கும் தேவா
துதியே துதியே துதித்திடுவேன்
அம்புவியாவும் படைத்தீரே
அம்பரா உந்தன் வாக்காலே
எம்பரா எல்லாம் ஈந்தீரே
நம்பினோர்க் குந்தன் தயவாலே

3. கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
அண்ணலே உந்தன் அருளாலே
அடியாரைக் கண் பார்த்தீரே
மன்னா எமக்கும் நீர் தாமே
எந்நாளும் எங்கள் துணை நீரே

4. தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
தேவா நீர் உந்தன் சிறகாலே
தினமும் மூடிக் காத்தீரே
தீதணு காதும் மறைவினிலே
தேடியுமதடி தங்கிடுவேன்

5. அல்லேலூயா தோத்திரமே
துதியே துதியே துதித்திடுவேன்
அகில சிருஷ்டிகளும் துதிக்க
அடிமை துதியா திருப்பேனோ
அல்லும் பகலும் நித்தியமாய்
அன்பே உமையும் துதித்திடுவேன்

Alleluah Thuthi Magimai அல்லேலூயா துதி மகிமை



Alleluah Thuthi Magimai
அல்லேலூயா துதி மகிமை – என்றும்
இயேசுவுக்கே செலுத்திடுவோம்
ஆ அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

1. சிலுவையை சுமப்பாயா
உலகத்தை வெறுப்பாயா
உலகத்தை வெறுத்து இயேசுவின் பின்னே
ஓடி வருவாயா

2. மோட்சத்தை அடைந்திடவே
பாடுகள் படவேண்டும்
பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில்
நிலைத்தே நிற்க வேண்டும்

3. ஜெபத்திலே தரித்திருந்து
அவர் சித்தம் நிறைவேற்று
முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க
பெலனைப் பெற்றுக்கொள்ளு…

4. சென்றவர் வந்திடுவார்
அழைத்தே சென்றிடுவார்
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
அவருடன் வாழ்ந்திடவே..

Aayiram Aayiram Paadalgalai ஆயிரம் ஆயிரம் பாடல்களை



Aayiram Aayiram Paadalgalai
1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை
ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்
யாவரும் தேன்மொழிப் பாடல்களால்
இயேசுவைப் பாடிட வாருங்களே
                        பல்லவி
அல்லேலூயா ! அல்லேலூயா !
என்றெல்லாரும் பாடிடுவோம்
அல்லலில்லை ! அல்லலில்லை !
ஆனந்தமாய்ப் பாடிடுவோம்

2. புதிய புதிய பாடல்களைப்
புனைந்தே பண்களும் சேருங்களேன்
துதிகள் நிறையும் கானங்களால்
தொழுதே இறைவனைக் காணுங்களேன்

3. நெஞ்சின் நாவின் நாதங்களே
நன்றி கூறும் கீதங்களால்
மிஞ்சும் ஓசைத் தாளங்களால்
மேலும் பரவசம் கூடுங்களேன்

4. எந்த நாளும் காலங்களும்
இறைவனைப் போற்றும் நேரங்களே
சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்
சீயோனின் கீதம் பாடுங்களேன்

Yesuvin Namam Inithana Namam இயேசுவின் நாமம் இனிதான நாமம்



Yesuvin Namam Inithana Namam
இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்
                           சரணங்கள
1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் — இயேசுவின்

2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் — இயேசுவின்

3. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம் — இயேசுவின்

4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம் — இயேசுவின்

5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் — இயேசுவின்

6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசை துரத்திட்ட நாமம் — இயேசுவின்