Friday, 28 May 2021
Inba Geetham Thunba Neram இன்ப கீதம் துன்ப நேரம்
Friday, 21 May 2021
En Nesar Yesuvin என் நேசர் இயேசுவின்
En Nesar Yesuvin என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே துன்ப வனாந்தரத்தில் நடந்திட இன்ப நல் வாழ்வடைந்தேன் 1. லீலி பு ஷ் பம் சரோனின் ரோஜா பாலிலும் வெண்மை தூய பிதா பூரண ரூப சௌந்தர்யமே பேர் சிறந்த இறைவா 2. கன்னியர்கள் நேசிக்கும் தேவா கர்த்தரின் நாமம் பரிமளமே இயேசுவின் பின்னே ஓடி வந்தோம் என்னையும் இழுத்துக் கொண்டார் 3. நேசக்கொடி மேல் பறந்தோங்க நேசர் பிரசன்னம் வந்திறங்க கிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன் கர்த்தரின் ஆறுதலே 4. தென்றலே வா வாடையே எழும்பு தூதாயீம் நற்கனி தூயருக்கே வேலி அடைத்த தோட்டமிதே வந்திங்கு உலாவுகின்றார் 5. நாட்டினிலே பூங்கனி காலம் காட்டுப்புறாவின் பாட்டொலிக்கும் கன்மலை சிகரம் என் மறைவே இந்நேரமே அழைத்தார் 6. நித்திரையே செய்திடும் ராவில் நித்தம் என் ஆத்மா நல் விழிப்பே என் கதவருகே நின்றழைத்த இயேசுவை நேசிக்கிறேன் 7. நேசத் தழல் இயேசுவின் அன்பே நேசம் மரணம் போல் வலிதே வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால் உள்ளம் அணைந்திடாதே 8. தூய ஸ்தம்பம் போலவே எழும்பி தேவ குமாரன் வந்திடுவார் அம்மினதாபின் இரதம் போல அன்று பறந்து செல்வேன்
Wednesday, 19 May 2021
Akkini Abishegam அக்கினி அபிஷேகம்
Akkini Abishegam அக்கினி அபிஷேகம் தந்து ஆவி பொழிந்திடும் 1. சுட்டெரிக்கும் நல் அக்கினி சுத்திகரிக்க எம்மையும் குற்றங்குறைகள் மற்றுங் கறைகள் முற்றிலும் நீக்கிடுமே எம்மில் - அக்கினி 2. பற்றினதே வான் அக்கினி பக்தன் எலியா கூப்பிட வேண்டுதல் கேட்டு வானந் திறந்து வல்லமை ஊற்றிடுமே இன்று - அக்கினி 3. மோசேயுங் கண்ட அக்கினி முட்செடி மேலே பற்றிட அற்புத காட்சி தற்பரன் மாட்சி அண்டிட தந்திடுமே அதை - அக்கினி 4. நாதாப் அபியூ அக்கினி நாடி அழிந்தால் நஷ்டமே அந்நிய தீயை பட்சிக்கும் தேவ ஆவியே வந்தாளும் நல்ல - அக்கினி 5. மேலறை வந்த அக்கினி சீஷரை அன்று சந்திக்க பற்பல பாஷை பேசி மகிழ்ந்த பக்தி வரம் தாரும் தேவ - அக்கினி 6. இரண்டு மடங்கு அக்கினி இந்த கடைசி நாட்களில் மாம்சமான யாவரின் மேலும் மாரியுடன் பொழியும் பின் - அக்கினி
Sunday, 16 May 2021
Arulnathar Naamamathil அருள்நாதர் நாமமதில்
En Aathumave Kalangidathe என் ஆத்துமாவே கலங்கிடாதே
En Aathumave Kalangidathe என் ஆத்துமாவே கலங்கிடாதே உன்னத தேவன் உன் அடைக்கலமே வானமும் பூமியும் தானம் விட்டு நிலை மாறினாலும் (2) 1. பஞ்சம் பசியோ நிர்வாணமோ மிஞ்சும் வறுமையோ வந்திடினும் கொஞ்சமும் அஞ்சாதே தஞ்சம் தந்து உன்னைத் தாங்கிடுவார் - என் 2. உற்றார் உறவினர் மற்றும் பலர் குற்றமே கூறித் திரிந்திடினும் கொற்றவன் இயேசுன்னை பெற்ற பிதாவைப் போல் அரவணைப்பார் - என் 3. நெஞ்சில் விசாரங்கள் பெருகுகையில் அஞ்சாதே என்றவர் வசனம் தேற்றும் வஞ்சகன் எய்திடும் நஞ்சாம் கணைகளைத் தகர்த்திடுவார் - என் 4. வாழ்க்கைப் படகினில் அலை மோதி ஆழ்த்துகையில் உன் அருகில் நிற்பார் சூழ்ந்திடும் புயல் நீக்கி வாழ்ந்திடவே வலக்கரம் பிடிப்பார் - என் 5. மரணமே வந்தாலும் மருளாதே சரணடைந்தால் தைரியம் தந்திடுவார் அரணவர் ஆபத்தில் திரணமாய் மதிப்பாய் உன் ஜீவனையே - என் 6. துன்ப பாதை செல்ல துணிந்திடுவாய் அன்பர் சென்ற பாதை அதுவேதான் துன்பமே உன் பங்கு துன்ப மூலம் தேவ ராஜ்யம் சேர்வாய் - என்
Saturday, 15 May 2021
Nithyanantha Karthar Yesuve நித்தியானந்த கர்த்தர் இயேசுவே
Nithyanantha Karthar Yesuve 1. நித்தியானந்த கர்த்தர் இயேசுவே நித்தமும் பிரகாசிக்கின்றார் பர்வதம் மீதிலே பக்தர் பாதங்கள் பரிசுத்தமுடன் மின்னுதே சீயோனிலே சுவிசேஷகர் ஜெப ஐக்கியமே காணுவோம் ஜெயங் கொண்டோராய் ஜெப வீரராய் சிலுவை யாத்திரை செல்லுவோம் 2. சிறு மந்தையின் பெரிய மேய்ப்பர் நெருங்கி வந்து நிற்கிறார் சின்னவன் ஆயிரம் பதினாயிரம் சேனைத் திரளாய் மாறுவான் - சீயோனிலே 3. உலகமெங்கும் சுவிசேஷத்தின் உயர்ந்த கொடி பறக்கும் திறந்த வாசலுள் பிரவேசித்து சிறந்த சேவை செய்குவோம் - சீயோனிலே 4. நரக வழி செல்லும் மாந்தருக்காய் நடு இராப்பகல் அழுதே நம் தலை தண்ணீராய் கண்கள் கண்ணீராய் நனைந்து வருந்தி ஜெபிப்போம் - சீயோனிலே 5. அவமானங்கள் பரிகாசங்கள் அடைந்தாலும் நாம் உழைப்போம் ஆத்தும பாரமும் பிரயாசமும் அல்லும் பகலும் நாடுவோம் - சீயோனிலே 6. எதிரிகள் எதிரே பந்தி எமக் காயத்தப் படுத்தி எம் தலை எண்ணெயால் அபிஷேகித்தார் எரிகோ மதிலும் வீழ்ந்திடும் - சீயோனிலே 7. சீயோன் என்னும் சுவிசேஷகி சிகரத்தில் ஏறுகின்றாள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் இலக்கம் நோக்கியே ஓடுவோம் - சீயோனிலே
Friday, 14 May 2021
Enakken Ini Payame எனக்கேன் இனி பயமே
Enakken Ini Payame எனக்கேன் இனி பயமே எந்தன் இயேசு என் துணையே என் துன்ப நேரத்திலே இயேசுவே என்னோடிருப்பார் கடந்த வாழ் நாட்களெல்லாம் கர்த்தரே என்னை சுமந்தார் கண்ணீர் யாவையும் துடைத்தார் 1. உண்மையாய் என்னையும் நேசித்தார் உள்ளங்கையில் என்னை வரைந்தார் அவர் அறியாதொன்றும் வந்ததில்லை அவரையே சார்ந்து கொண்டேன் 2. கர்த்தரோடிசைந்தே நடந்தேன் கிருபை சமாதானம் ஈந்தார் விசுவாசத்தால் நானும் பிழைத்ததால் விரும்பி என்னை அணைத்தார் 3. யுத்தங்கள் துன்பங்கள் சந்தித்தும் யோர்தான் நதி புரண்டு வந்தும் எலியாவின் தேவன் என் ஜெபங்களை ஏற்று பதில் அளித்தார் 4. இத்தனை அற்புத நன்மைகள் கர்த்தர் செய்ததை நினைத்திடுவேன் இதுவரை வழிகாட்டி நடத்தினார் இன்னமும் காத்திடுவார் 5. உலகம் முடியும் வரையும் உந்தனோடிருப்பேன் என்றவர் மகிமையில் சேர்ப்பாரே நம்பிக்கையில் மேன்மை பாரட்டுகிறேன்
Wednesday, 12 May 2021
Pirana Nathan Ennil பிராண நாதன் என்னில்
Pirana Nathan Ennil
1. பிராண நாதன் என்னில் வைத்ததாம் அன்பினை
தியானிக்கும் போதெல்லாம் கண்ணீர் பெருகுதே
அன்பின் சொரூபனாய் ஆருயிர் நேசனாய்
நீச தூசி என்னை நேசிக்கலானீரே
என் இயேசுவே நான் உம்முடையவன்
நீர் என் சொந்தம் என்றென்றுமாய்
ஆவி ஆத்துமா சரீரம் பலியாய்
படைத்திட்டேன் ஏற்றுக் கொள்வீர்
2. தாயின் வயிற்றினில் பிரித்ததாம் நாள் முதல்
பற்பல பாதையில் பரிவுடன் காத்தீரே
வஞ்சக சாத்தானின் சூழ்ச்சியினின்றுமே
பறித்திழுத்தெந்தனை உம் சொந்தமாக்கினீர் - என்
3. குயவனின் கையிலே களிமண்ணைப் போலவே
என்னை உம் கையிலே வைத்திட்டேன் நாயகா
என் சொந்த இஷ்டமோ ஏதும் வேண்டாம் நாதா
உம் நோக்கம் என்னிலே பூரணமாகட்டும் - என்
4. நேசர் கரத்தினில் தீமை ஏதுமுண்டோ
யாதும் என் நன்மைக்கே என்பதை அறிகுவேன்
ஜுவாலிக்கும் அக்கினியோ பெருக்கான வெள்ளமோ
பட்சிக்க விட்டிடீர் அமிழ்த்தவும் பார்த்திடீர் - என்
5. என்னையும் எந்தனுக் குள்ளதாம் யாவையும்
நேசர் கரத்தில் முற்றுமாய் வைத்திட்டேன்
ஜீவனோ மரணமோ பிராண நாதன் என்னில்
வாஞ்சிப்பதெதுவோ சம்பூரணமாகட்டும் - என்
6. மரண இருள் பள்ளம் தாண்டிடும் நேரத்தில்
இயேசு என் நேசரின் கரமதைக் காண்பதால்
மகிழ்வுடன் ஏகுவேன் அக்கரை யோர்தானில்
நித்தியம் நித்தியம் ஆனந்தம் கொள்ளுவேன் - என்
Paraloga Rajiya Vasi பரலோக இராஜ்ஜிய வாசி
Paraloga Rajiya Vasi பரலோக இராஜ்ஜிய வாசி பரன் இயேசுவின் மெய் விசுவாசி புவி யாத்திரை செய் பரதேசி பரன் பாதம் நீ மிக நேசி 1. ஆபிரகாம் ஈசாக்குடனே ஆதிப் பிதாக்கள் யாவருமே தேவனுண்டாக்கின மெய் ஸ்தலமே தேடியே நாடியே சென்றனரே அந்நியரே பரதேசிகளே – பரலோக 2. சாவு துக்கம் அங்கே இல்லையே சாத்தானின் சேனை அங்கில்லையே கண்ணீர் கவலை அங்கில்லையே காரிருள் கொஞ்சமும் அங்கில்லையே பஞ்சம் பசி ஒன்றும் அங்கில்லையே – பரலோக 3. பொன் பொருள் வேண்டாம் இயேசு போதும் மண் ஆசை வேண்டாம் இயேசு போதும் பாவமே வேண்டாம் இயேசு போதும் லோகமே வேண்டாம் இயேசு போதும் ஆத்தும இரட்சகர் இயேசு போதும் – பரலோக 4. நம்பிக்கை பொங்கப் பாடிடுவேன் நல் மனச் சாட்சி நாடிடுவேன் இத்தரை யாத்திரை கடந்திடுவேன் அக்கறை சேர்ந்து வாழ்ந்திடுவேன் அந்த தினம் என்று கண்டிடுவேன் – பரலோக
Tuesday, 11 May 2021
Deva Samathanam Kirubaiye தேவ சமாதானம் கிருபையே
Deva Samathanam Kirubaiye தேவ சமாதானம் கிருபையே தேவ சந்தோஷமும் நிறைவாயே தேவாசீர்வாதங்கள் தங்கிடவே தேவன் அருள் ஈவாரே 1. ஆணி கடாவின கரமதே அன்புடன் உன்னை அணைக்கின்றதே வல்லமை உன் மீதில் பாய்ந்திடவே கர்த்தர் வலக்கை நீட்டுகின்றார் 2. இத்தனை ஆண்டுகள் சுமந்தாரே இன்றைக்கும் உன் ஏசு மாறிடாரே கலங்காதே திகையாதே என் உள்ளமே கர்த்தர் துணை நிற்கின்றார் 3. தேவ சித்தம் என்றும் செய்திடுவாய் தேவகுமாரன் உன்னோடிருப்பார் உன் மேல் தன் கண் வைத்து ஆலோசனை தந்து உன்னை நடத்திடுவார் 4. கன்மலை மேல் வீட்டைக் கட்டுவாயே கர்த்தரின் கற்பனை கைக்கொள்வாயே உத்தம சாட்சியாய் நின்றிலங்குவாயே ஊழியம் செய்குவாயே 5. நல்ல தீர்க்காயுள் பெருகிடவே நித்திய ஜீவனும் பெற்றிடவே பக்தர்கள் பந்தியில் பங்கடைந்திடவே பரன் தயை புரிவார் 6. வாழ் நாளெல்லாம் களிகூர்ந்திடவே வாடாத கிருபை ஈந்திடுமே கிருபை கிருபை என்றென்றுமுள்ளதே கர்த்தனை வாழ்த்திடுவோம்
Sunday, 9 May 2021
Ulagum Vaanum உலகும் வானும்
Ulagum Vaanum 1. உலகும் வானும் செய்தாளும் ஒப்பில் சர்வ வல்லவராய் இலகுமருளாம் தந்தையாம் எம்பிரான்றனை நம்புகிறேன் 2. அவரொரு பேறாமைந்தனுமாய் ஆதிமுதலெங்கர்த்தனு மாய்த் தவறிலேசு க்கிறிஸ்துவையும் சந்ததமே யான் நம்புகிறேன் 3. பரிசுத்தாவி அருளதனால் படிமேல் கன்னிமரியிடமாய் உருவாய் நரரவதாரமதாய் உதித்தாரெனவும் நம்புகிறேன் 4. பொந்துபிலாத்ததி பதினாளில் புகலருபாடுகளையேற்று உந்துஞ் சிலுவையறையுண்டு உயிர்விட்டாரென நம்புகிறேன் 5. இறந்தே அடங்கிப் பாதாளம் இறங்கி மூன்றாம் தினமதிலெ இறந்தோரிட நின்றே உயிரொ டெளுந்தாரெனவும் நம்புகிறேன் 6. சந்தத மோட்சம் எளுந்தருளிச் சருவவல்ல பரனான எந்தை தன்வலப் பாரிசமே யிருக்கிறாரென நம்புகிறேன் 7. உயிருள்ளோரை மரித்தோரை உத்தமஞாயந் தீர்த்திடவே ஜெயமாய்த் திரும்பவருவாரெனச் சிந்தையார நம்புகிறேன்
Visuvasame Nam Jeyame விசுவாசமே நம் ஜெயமே
Visuvasame Nam Jeyame விசுவாசமே நம் ஜெயமே விலை மதியாதோர் நல் பொக்கிஷமே விசுவாசமாம் கேடகம் தாங்கி விசுவாச பாதையில் முன்னேறுவோம் 1.மலை போன்ற துன்பங்கள் நெருங்கிடினும் மலையாதே யாவும் அகன்றிடுமே வியாதி வருத்தம் போராட்டம் வந்தும் விசுவாசத்தால் நாமும் ஜெயமடைவோம் 2.எரிகோவின் மதில்கள் தகர்ந்திடவே ஏகிச் சென்றான் பக்தன் யோசுவாவும் விசுவாசத்தாலே முன்னேறியே நாம் வல்லவர் பெலத்தால் வென்றிடுவோம் 3.விசுவாசம் காத்திட தம் ஜீவனை விசுவாச வீரர்கள் இழந்தனரே நல்ல போராட்டம் போராடியே நாம் விசுவாசத்தை என்றும் காத்துக் கொள்வோம் 4.விசுவாச நம்பிக்கை அறிக்கையிலும் திடமான மனதுடன் நிலைத்திருப்போம் வாக்கு மாறாத கர்த்தரை நிதமும் விசுவாசத்தோடு நாம் பின் செல்லுவோம் 5. பாவங்கள் பாரங்கள் அகற்றிடவே நாம் பரிசுத்தர் சிந்தையை அணிந்திடுவோம் இயேசுவை நோக்கி சீராக ஓடி விசுவாச ஓட்டத்தை முடித்திடுவோம்
Friday, 7 May 2021
Seeonile En Thida சீயோனிலே என் திட
Thursday, 6 May 2021
Naan Pavasetrinile நான் பாவச் சேற்றினிலே
Naan Pavasetrinile 1. நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன் நான் சாபத்திலே மாண்டேன் எண்ணிலடங்கா பாவங்கள் போக்கி இயேசென்னை மீட்டாரே என் நாவிலே புதுப் பாட்டுகள் என்றென்றும் கவி தங்கிடும் மா சந்தோஷம் மறுபிறப்பீந்து மன இருள் நீக்கினார் 2. என் ஜென்ம கரும பாவங்கள் எல்லாம் தொலைத்தாரே மன்னித்து என்றும் மறந்து விட்டாரே மா பரமானந்தம் 3. என் ஆத்ம மீட்பை அருமையாய் இயேசாண்டவர் எண்ணினதால் சொந்த தம் ஜீவனாம் இரத்தம் எனக்காய் சிந்தி இரட்சித்தாரே 4. கார்மேகம் போல் என் பாவங்கள் கர்த்தர் அகற்றினாரே மூழ்கியே தள்ளும் சமுத்திர ஆழம் தூக்கி எறிந்தாரே 5. இரத்தாம்பரம் பொன் சிவப்பான இதய பாவங்களை பஞ்சையும் போலவே வெண்மையுமாக்கி தஞ்சம் எனக்கீந்தார் 6. மேற்கு திசைக்கும் கிழக்குக்கும் மா எண்ணிலா தூரம் எந்தன் பாவங்கள் அத்தனை தூரம் இயேசு விலக்கினார் 7. நான் ஜலத்தினால் நல் ஆவியினால் நான் மறுபடியும் பிறந்தேன் தேவனின் ராஜ்யம் சேர்வதற்காக தேடிக்கொண்டேன் பாக்யம் 8. அங்கேயும் சீயோன் மலைமீதே ஆனந்தக் கீதங்களே ஆயிரம் ஆயிரம் தூதர்கள் சூழ அன்பரைப் பாடிடுவேன்
Tuesday, 4 May 2021
En Devan En Belane என் தேவன் என் பெலனே
En Devan En Belaneஎன் தேவன் என் பெலனே அவர் கூறும் நல் வசனம் என் பாதையின் வெளிச்சம் அவர் நாமம் என் நினைவே 1. தீங்கு நாளில் என்னை அவர் தம் கூடார மறைவினில் காத்திடுவார் தகுந்த வேளை தம் கரத்தால் கன்மலை மேலாய் உயர்த்திடுவார் -என் தேவன் 2.கர்த்தரிடம் ஒன்றை கேட்டேன் அதையே அவரிடம் நாடிடுவேன் அவரின் முகமதை நான் காண அவரில் என்றும் நிலைத்திருப்பேன் -என் தேவன் 3.கர்த்தருக்காய் நீ காத்திருந்தால் அவரால் இருதயம் ஸ்திரப்படுமே திட மனதோடு காத்திருந்தே அடைக்கலம் புகுவாய் என்றென்றுமே -என் தேவன்
Saturday, 1 May 2021
Kadal Konthalithu கடல் கொந்தளித்து
Kadal Konthalithu1. கடல் கொந்தளித்துப் பொங்க கப்பல் ஆடிச் செல்கையில் புயல் காற்று சீறி வீச பாய் கிழிந்து போகையில் இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாயிரும் காற்றமைத்துத் துணை நின்று கரை சேரச் செய்திடும் 2. கப்பலிலே போவோருக்கு கடும் மோசம் வரினும் இடி மின் முழக்கம் காற்று உமக்கெல்லாம் அடங்கும் இருளில் நீர் பரஞ்சோதி வெயிலில் நீர் நிழலே யாத்திரையில் திசை காட்டி சாவில் எங்கள் ஜீவனே 3. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும் இன்ப துன்ப காலத்தில் எங்கள் ஆவி உம்மில் தங்கும் இகபர ஸ்தலத்தில் இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாயிரும் காற்றமைத்துத் துணை நின்று கரை சேரச் செய்திடும்
Vali Nadathum வழி நடத்தும்
Vali Nadathumவழி நடத்தும் வல்ல தேவன் வாழ்வில் நாயகனே வாழ்வில் நாயகனே நம் தாழ்வில் நாயகனே 1. பரதேசப் பிரயாணிகளே நாம் வாழும் பாரினிலே – பரமானந்தத்தோடே செல்வோம் பரமன் நாட்டிற்கே இயேசு பரன் தம் வீட்டினிற்கே 2. போகும் வழியைக் காட்டி நல்ல போதனை செய்வார் – ஏகும் சுத்தர் மீது கண்கள் இருத்தி நடத்துவார் இயேசு திருத்தி நடத்துவார் 3. அந்தகார சக்திகள் எம்மை அணுகிடாமலே – சொந்தமான தம் ஜனத்தை சூழ்ந்து காப்பாரே இயேசு துணையாய் நிற்பாரே 4. வாதை நோய்கள் வன்துன்பங்கள் வருத்திய போதும் – பாதையில் நாம் சோர்ந்திடாமல் பலப்படுத்திடுவார் இயேசு திடப்படுத்திடுவார் 5. காடானாலும் மேடானாலும் கடந்து சென்றிடுவோம் – பாடானாலும் பாடிச் செல்வோம் பரவசமுடனே இயேசு பரன் தான் நம்முடனே 6. அன்றன்றுள்ள தேவை தந்து ஆதரிப்பாரே – என்றென்றும் துதிகனமும் மகிமையவர்க்கே இயேசு மகிபனாமவர்க்கே