Tuesday 25 April 2023

Ekkala Thoniyide எக்காள தொனியோடே


 

1. எக்காள தொனியோடே மானிடரே வாரீர்

எக்காலம் இயேசுவையே அறிவிக்கவே வாரீர்

அல்லேலூயா! அல்லேலூயா

 

2. என் இயேசு பொன்னேசு என்னை மாற்றியவரும் அவரே

அன்போடும் பண்போடும் நடத்தியவரும் அவரே

அல்லேலூயா! அல்லேலூயா

 

3. சந்தோஷம் சந்தோஷம் என்னை ஆவியிலே நிறைத்தீர்

சங்கீதம் பாடிடுவேன் நான் சபையிலே சேர்ந்திடுவேன்

அல்லேலூயா! அல்லேலூயா

 

4. கல்வாரி நாயகனாம் இயேசு மீண்டும் வந்திடுவார்

கைதட்டிப் பாடிடுவேன் நான் அவருடன் சேர்ந்திடுவேன்

அல்லேலூயா! அல்லேலூயா

 

5. சாத்தான் என்னை அணுகும்போது இயேசுவை கூப்பிடுவேன்

சாத்தானை ஜெயித்தவராம் அவர் எனக்கு ஜெயம் தருவார்

அல்லேலூயா! அல்லேலூயா

 

6. அன்பான மானிடரே நீங்கள் அனைவரும் வாருங்கள்

அன்பான இரட்சகராம் நம்மை அழைக்கிறார் வாருங்கள்

அல்லேலூயா! அல்லேலூயா


Monday 24 April 2023

Elumbi Pragasi எழும்பி பிரகாசி


 

எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது

கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது

 

பூமியையும் ஜனங்களையும்

காரிருள் மூடும்  ஆனாலும்

உன்மேல் கர்த்தர் உதிப்பார்

 

1. உன் குமாரரும் குமாரத்திகளும்

உன் அருகினில் வளர்க்கப்படுவர்

உன் கண்ணால் கண்டு நீ ஓடி வருவாய்

உன் இருதயம் மகிழ்ந்து பூரிக்கும்

 

2. உன்னை சேவிக்க ஜாதிகள் அழியும்

ராஜ்ஜியங்களும் பாழாகப் போய்விடும்

கர்த்தர் நகரம் பரிசுத்தரின் சீயோன்

என்று கூறி நீ அழைக்கப்படுவாய்

 

3.உன் தேசத்திலே கொடுமை தீண்டாதே

உன் எல்லைகளில் நாசமும் வராதே

உன் மதில்களை இரட்சிப்பென்று சொல்வாய்

உன் வாசல்களை துதியென்றும் சொல்வாய்

 

4.சூரியன் இனி அஸ்தமிப்பதில்லை

சந்திரன் இனி மறைவதுமில்லை

கர்த்தரே நித்ய வெளிச்சமாவாரே

உன் துக்க நாட்கள் முடிந்து போயிற்றே


Saturday 22 April 2023

Unthan Aasi Tharum உந்தன் ஆசி தாரும்


 


உந்தன் ஆசி தாரும்

எந்தன் ஏசு தேவா

தந்தையே நான் பணிகிறேன்

 

1. ஞானம் அற்றவள் நானே

ஞானம் தாரும் தேவா

உம்மையன்றி வழி ஏது

என் கல்வி ஊற்று நீரே

 

2. பெலன் இல்லாதவள் நானே

பெலனைத் தாரும் தேவா

உந்தன் பெலன் போல் பெலன் ஏது

என் பெலனும் சுகமும் நீரே

 

3. பக்தி அற்றவள் நானே

பக்தி தாரும் தேவா

பக்தியோடு உம்மைத் தேட

உம் கிருபை தாரும் தேவா


Wednesday 25 January 2023

Seermigu Van Puvi Deva சீர்மிகு வான் புவி தேவா


 


1. சீர்மிகு வான் புவி தேவா தோத்ரம்

சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம்,

ஏர்குணனே, தோத்ரம் அடியார்க்-கு

இரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா.

 

2. நேர்மிகு அருள்திரு அன்பா, தோத்ரம்,

நித்தமு முமக் கடியார்களின் தோத்ரம்,

ஆர் மணனே, தோத்ரம், உனது

அன்பினுக்கே தோத்ரம், மா நேசா.

 

3. ஜீவன், சுகம், பெலன், யாவுக்கும் தோத்ரம்

தினம் தினம் அருள் நன்மைக்காகவும் தோத்ரம்

ஆவலுடன் தோத்ரம், உனது

அன்பினுக்கே தோத்ரம், மா நேசா.

 

4. ஆத்தும நன்மைகட்காகவும் தோத்ரம்.

அதிசய நடத்துதற்காகவும் தோத்ரம்

சாற்றுகிறோம் தோத்ரம், உனது

தகுமன்புக்கே தோத்ரம், மா நேசா.

 

5. மாறாப் பூரண நேசா, தோத்ரம்,

மகிழொடு ஜெபமொழி மாலையின் தோத்ரம்,

தாராய் துணை, தோத்ரம், இந்தத்

தருணமே கொடு தோத்ரம், மா நேசா.


Tuesday 24 January 2023

Paadi Thuthi Maname பாடித் துதி மனமே


 

பாடித் துதி மனமே பரனைக்
கொண்டாடித் துதி தினமே

நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து

1. தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப்

2. சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தராம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்

3. எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனை

 


Monday 23 January 2023

Innum Orumurai இன்னும் ஒருமுறை



 

இன்னும் ஒருமுறை இன்னும் ஒருமுறை

மன்னிக்கவேண்டும் தேவா

என்று பலமுறை என்று பலமுறை

வந்துவிட்டேன் இயேசு ராசா (2)

 

1. ஒத்தையில போகையிலே கூட வந்தவரும் நீர்தான்

தத்து தடுமாறையில தாங்கிப்பிடிச்சவர் நீர் தான்

ஓடி ஓடி ஒளிஞ்சேனே தேடி தேடி வந்து மீட்டீர்

இருளில் இருந்து தூக்கி ராஜ்ஜியத்தின் பங்காய் சேர்த்தீர்இன்னும்

 

2. பச்சையினு எண்ணி நானும் இச்சையால விழுந்தேன்

பஞ்சு மெத்தையினு நம்பி முள்ளுக்குள்ள தான் படுத்தேன்

புத்தி கெட்டு போனதால பாதை மாறி போனேனே

நல்ல மேய்ப்பன் இயேசு தானே காயம் கட்டி அணைத்தீரே- இன்னும்

 

3.  சொத்து சுகம் நீங்க தானு புரியாமல் நானே

சத்துருவின் சதியாலே தூரமாகி போனேன்

தகப்பன் வீட்டை நினைத்தேன் தந்தையின் நேசத்தை உணர்ந்தேன்

தாமதமின்றி வருவேன் நித்தமும் தாங்கி மகிழ்வேன்- இன்னும்

Sunday 22 January 2023

Illathin Thalaivarai Yesu இல்லத்தின் தலைவராய் இயேசு


 

இல்லத்தின் தலைவராய் இயேசு -  இருந்தால்

 இல்லை என்பது இல்லையே

 

1.  நிறைவான வாழ்வினைத் தருவார் - தந்து

குறையாவும் போக்கியே விடுவார்

மறைவான விருந்தினராவார் - இன்ப

மறை ஞான விருந்தினைத் தருவார்

 

2. வழியாக வருபவர் அவரே - வழியில்

ஒளியாக திகழ்பவர் அவரே

வழுவாமல் காப்பவர் அவரே நம்மைத்

தழுவியே அணைப்பவர் அவரே

 

3. அவர் பாதம் தொடர்ந்திட வேண்டும் - நித்தம்

அவர் பாதை நடந்திட வேண்டும்

அவர் போல வாழ்ந்திட வேண்டும் - என்றும்

பிறர்க்காக உழைத்திட வேண்டும்