Thursday, 29 December 2022

Naan Naanagave Vanthirukiren நான் நானாகவே வந்திருக்கிறேன்


நான் நானாகவே வந்திருக்கிறேன்

உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்

நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா

உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா

 

1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே

நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே

ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே

தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே

நான் நானாக நானாக வந்திருக்கிறேன்நான்

 

2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே

மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே

எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே

எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே

நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்நான்

Tuesday, 27 December 2022

Deva Kirubai தேவ கிருபை


 

தேவ கிருபை என்றுமுள்ளதே

அவர் கிருபை என்றுமுள்ளதே

அவரைப் போற்றி துதித்துப்பாடி

அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்


1.     நெருக்கப்பட்டோம் மடிந்திடாமல்

கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே

அவர் நல்லவர் அவர் வல்லவர்

அவர் கிருபை என்றுமுள்ளதே


2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்

பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு

முன்சென்றாரே அவர் நல்லவர்

அவர் கிருபை என்றுமுள்ளதே


3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்

முட்செடி தன்னில் தோன்றிய தேவன்

பாதுகாத்தாரே அவர் நல்லவர்

அவர் கிருபை என்றுமுள்ளதே


4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்

பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்

என்னை நடத்தினார் அவர் நல்லவர்

அவர் கிருபை என்று முள்ளதே


5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்

வீரன் நெகேமியா ஆவியை அளித்தே

திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே

அவர் கிருபை என்றுமுள்ளதே


6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்

நித்தமும் நம்முடன் இருப்பதாலே

அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்

அவர் கிருபை என்றுமுள்ளதே


Monday, 26 December 2022

Thuthithu Padida துதித்துப் பாடிட


 


1. துதித்துப் பாடிட பாத்திரமே

துங்கவன் இயேசுவின் நாமமதே

துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்

தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே


ஆ! அற்புதமே அவர் நடத்துதலே

ஆனந்தமே பரமானந்தமே

நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே

நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்


2. கடந்த நாட்களில் கண்மணிபோல்

கருத்துடன் நம்மைக் காத்தாரே

கர்த்தரையே நம்பி ஜீவித்திட

கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே


3. அக்கினி ஊடாய் நடந்தாலும்

ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும்

சோதனையோ மிகப் பெருகினாலும்

ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே


4. இந்த வனாந்திர யாத்திரையில்

இன்பராம் இயேசு நம்மோடிருப்பார்

போகையிலும் நம் வருகையிலும்

புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே


5. வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார்

வாரும் என்றே நாம் அழைத்திடுவோம்

வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள்

விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே

Wednesday, 21 December 2022

Oru Kodi Padalgal Naan Paduven ஒரு கோடி பாடல்கள் நான் பாடுவேன்


 


ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன்அதைப்

பாமாலையாக நான் சூடுவேன்

உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன்உந்தன்

புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்

 

1. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய்அதில்

மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (2)

என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனேஅதில்

எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (2) – ஆதியும்

 

ஆதியும் நீயே அந்தமும் நீயே

பாடுகிறேன் உனை இயேசுவே

அன்னையும் நீயே தந்தையும் நீயே

போற்றுகிறேன் உனை இயேசுவே

 

2.  இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதேஅங்கு

விரிகின்ற மலர் உந்தன் அருள் பாடுதே (2)

அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம்வந்து

கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2) – ஆதியும்


Monday, 28 November 2022

Unnatha Devanukke Magimai உன்னத தேவனுக்கே மகிமை


 


உன்னத தேவனுக்கே மகிமை
உலகில் சமாதானமாமே
காரிருள் நீங்கிடக் குவலய மீதினில்
பேரொளியாய் ஜெனித்தார்

அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா துதியவர்க்கே

1. மானிடர் மேல் இவர்கன்பிதுவோ
மனுக்கோலமாய் மனுவேலனார்
மாட்சிமை யாவையும் துறந்தே இவ்வுலகில்
மானொளியாய் ஜெனித்தார்

2. தாரகை என அவர் தோன்றிடவே
நேர் பாதையில் நடந்திடவே
தற்பரன் கிருபையும் சத்திய மீந்திட
தன் ஒளியாய் ஜெனித்தார்

3. வாழ்த்துவோம் பாலகன் இயேசு பரன்
வல்ல தேவனின் ஏக சுதன்
வாஞ்சித்தாரே எம்மில் வாசம் செய்திடவே
வானொளியாய் ஜெனித்தார்

4. தாவீதின் வேர் இவராய் அவனின்
ஜெய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கவே
தாசனின் ரூபமாய் தாரணி மீதிலே
தாம் உதித்தார் ஒளியாய்


Sunday, 27 November 2022

Pathai Theriyatha Aatai Pola பாதை தெரியாத ஆட்டைப் போல


 


பாதை தெரியாத ஆட்டைப் போல

அலைந்தேன் உலகிலே

நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே

 

1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்

பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்

கல்வாரியினண்டை வந்தேன்

 பாவம் தீர நான் அழுதேன்பாதை

 

2. என் காயம் பார்த்திடு என்றீர்

உன் காயம் ஆறிடும் என்றீர்

நம்பிக்கையோடே நீ வந்தால்

துணையாக இருப்பேனே என்றீர்பாதை

 

3. ஊனினை உருக்கிட வேண்டும்

உள்ளொளி பெருக்கிட வேண்டும்

உம் ஆவியைத் தர வேண்டும்

எம் நெஞ்சம் மகிழ்ந்திட வேண்டும்பாதை


Friday, 4 November 2022

Alleluah Namathaandavarai அல்லேலூயா நமதாண்டவரை


 

அல்லேலூயா நமதாண்டவரை
அவர் ஆலயத்தில் தொழுவோம்
அவருடைய கிரியையான
ஆகாய விரிவை பார்த்து

1. மாட்சியான வல்ல கர
மகத்துவத்துக்காகவும் துதிப்போம்
மா எக்காள தொனியோடும்
வீணையோடும் துதிப்போம்
மாசில்லா சுர மண்டலத்தோடும்
தம்புருவோடும் நடனத்தோடும்
மாபெரியாழோடும் இன்னிசை தேன்
குழலோடும் துதித்திடுவோம்

2. அல்லேலூயா ஓசையுள்ள
கைத்தாளங்களை கொண்டும் துதிப்போம்
அவருடைய புதுப்பாட்டை
பண்ணிசைத்து துதிப்போம்
அதிசய படைப்புகள் அனைத்தோடும்
உயிரினை பெற்ற யாவற்றோடும்
அல்லேலூயா கீதம் அனைவரும்
பாடித் துதித்து உயர்த்திடுவோம்


Wednesday, 2 November 2022

 




அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய்  நாமும் செல்லுவோம்
அவர் பலியினில் கலந்திட
அவர் ஒளியினில் நடந்திட
சாட்சிகளாய்  என்றும்
வாழ்ந்திடஇந்நாளிலே

1. தேடினேன் தேவன் வருகிறார்
தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மை தாங்குவார்
துயரினில் நம்மைத் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார்
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்

2. அன்பினால் உலகை ஆளுவார்
ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார்
ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்


Tuesday, 1 November 2022

Un Pugalai Paduvathu உன் புகழைப் பாடுவது


 

உன் புகழைப் பாடுவது என்
வாழ்வின் இன்பமையா
உன் அருளைப் போற்றுவது என்
வாழ்வின் செல்வமையா
     
1. துன்பத்திலும் இன்பத்திலும் நல்
தந்தையாய் நீ இருப்பாய்
கண்ணயரக் காத்திருக்கும் நல்
அன்னையாய் அருகிருப்பாய் 
அன்பு எனும் அமுதத்தினை நான்
அருந்திட எனக்களிப்பாய்
உன்நின்று பிரியாமல்
நீ என்றும் அணைத்திருப்பாய் (2)       – உன் புகழை

2. பல்லுயிரை படைத்திருப்பாய் நீ
என்னையும் ஏன் படைத்தாய்
பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ
என்னையும் ஏன் அழைத்தாய் 
அன்பினுக்கு அடைக்கும் தாழ் 
ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல்
நான் என்றும் வாழ்ந்திருப்பேன்  (2)     -உன் புகழை

Monday, 31 October 2022

En Yesuve Unnai Naan என் இயேசுவே உன்னை நான்


 

என் இயேசுவே உன்னை நான்

மறவேன் மறவேன்

எந்நாளும் உன் அருளை நான்

பாடி மகிழ்ந்திருப்பேன்

என் இயேசுவே உன்னை நான்

மறவேன் மறவேன்

 

1. உன் நாமம்  என் வாயில்

நல் தேனாய் இனிக்கின்றது 

உன் வாழ்வு என் நெஞ்சில் – நல்

செய்தியாய் ஜொலிக்கின்றது

உன் அன்பை நாளும் எண்ணும் போது

ஆனந்தம் பிறக்கின்றது. –என் இயேசுவே

 

2. உன் நெஞ்சின் கனவுகளை

நிறைவேற்ற நான் உழைப்பேன்

உறவாகும் பாலங்களை

உலகெங்கும் நான் அமைப்பேன்

இறையாட்சி மலரும் காலம் வரையில்

இனிதாய் எனை அளிப்பேன்  –என் இயேசுவே

Vanthalume Ennalume வந்தாளுமே எந்நாளுமே


 


1. வந்தாளுமே எந்நாளுமே

உன் நாமமே என் தாபமே

இந்நேரமே கண்பாருமே

 

2. தேவாவியே வரந்தாரும்

இப்பாவியின் பாவம் தீரும்

உம் ஜோதியின் ஒளிவீசும்

 

3. சத்துருக்கள் சதி செய்ய

நித்தம் என்னை நெருக்குகிறார்

அத்தனே நீர் அடைக்கலம்

 

4. இப்பாரிலே நின்பேரையே

தப்பாமலே யான் பாடியே

எப்போதுமே கொண்டாடுவேன்

 

5. என் மேசையா உன் ஆசையைக்

கொண்டோசையாய் நான் பேசவே

நின்னாசி தா நல் நேசமாய்

 

6. நாதனுன்னை எந்நேரமும்

ஓதும் ஏழைப் பாவியேனை

ஆதரித்தே ஆண்டருள்வாய்


Friday, 2 September 2022

Jeevanulla Arathanai ஜீவனுள்ள ஆராதனை


 


ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

ஏக தெய்வமே உமக்கு ஆராதனை
திரி யேக தெய்வமே உமக்கு ஆராதனை

1.புத்தியுள்ள ஆராதனை உமக்கு தானே
பக்தியுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே

2. சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானே
பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே

3. அதிகாலை ஆராதனை உமக்கு தானே
தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே

4. இரவிலும் ஆராதனை உமக்கு தானே
இரக்கம் காட்ட நீர் ஒருவர் தானே

5. எப்பொழுதும் ஆராதனை உமக்கு தானே
இப்பொழுதும் ஆராதனை உமக்கு செய்வேன்


Thursday, 1 September 2022

Arathanaikuriavare Ummai ஆராதனைக்குரியவரே உம்மை


 


ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் 
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே 

1. என்னை நேசிப்பவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

2. என்னை மன்னித்தவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

3. என்னை ஆட்கொண்டவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

4. என்னை உயர்த்தினவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

5. என்னை குணமாக்குபவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்


Tuesday, 23 August 2022

Boomiyin Manthare Koodi vaareer பூமியின் மாந்தரே கூடி வாரீர்


 


1. பூமியின் மாந்தரே கூடிவாரீர்
பூரித்தே பேரன்பாய்ப் பாடி வாரீர்
தேனிசைப் பாமலர் சூடிடுவீர்
தேவனின் திருமுன்னே நாடிடுவீர்

2. நம்மையிங் காக்கியோர் ஓரிறையாம்
நாமவர் உடைமையாம் ஓர் நிறையாம்
மெய்மையின் மேய்ச்சலின் செம்மறி நாம்
மேவிநம் ஆயனை நாமறிவோம்

3. வாசலில் நன்றி கூர் உணர்வோடே
வாருங்கள் திருச்சுற்றில் துதியோடே
நேசமாய் உளமெல்லாம் கனிந்தெழுந்தே
நிறைபெயர் போற்றுங்கள் மலர்ந்துயர்ந்தே

4. ஆண்டவன் நன்மையின் மயமாவார்
ஆரருள் மாறாத நயமாவார்
ஆண்டவன் பேருண்மை தலைமுறையாய்
ஆண்டென்றும் தாங்கிடும் அருள் நிறைவாய்


Saturday, 6 August 2022

Vanamum Boomiyum Malai வானமும் பூமியும் மலை


 

Vanamum boomiyum malai pallathakum

Vaalthume aandavar  nallavar vallavar

 

1. Santhira sooryan sagalamum vananguthe

Enthanin ithayamum inbathal ponguthe 

unthanin kirubaiyai ennavum mudiyathe

thanthaiyumanavar nallavar vallavar- vanamum

 

2. Pachai pasumaigalum paramanai potruthe

paravai inangalum padi thuthikuthe 

Paktharin  ullam  paravasam adaiyuthe

Parisutha aandavar nallavar vallavar- vanamum

 

3. Udal nalam petrathal ullamum ponguthe

Kadal pola karunyam kandathal thulluthe 

kadalalai yesuvin patham thaluvuthe

Thidamana aandavar nallavar vallavar- vanamum


Saturday, 30 July 2022

Unnai Sirushtithavar Unnai Marapaaro உன்னை சிருஷ்டித்தவர் உன்னை மறப்பாரோ


 


உன்னை சிருஷ்டித்தவர் உன்னை மறப்பாரோ

உன்னை உண்டாக்கினவர் உன்னை விடுவாரோ – 2

 

கலங்கிடும் மாந்தரே

கண்ணீ ரை துடைத்திடு – 2

கவலையை விட்டு விட்டு வா

இயேசுவைப் பின்பற்றி வா – 2

 

1. காற்றும் கடலும் எதற்காக

கனிமரமெல்லாம் எதற்காக – 2

சூரிய சந்திரனும் எதற்காக

அத்தனையும் அது உனக்காக – 2

 

2. மலையும் மலர்களும் எதற்காக

நிலமும் நீரும் எதற்காக – 2

பாடும் பறவைகள் எதற்காக

அத்தனையும் அது உனக்காக – 2

 

3. சிலுவை சுமந்தது எதற்காக

சிந்தின இரத்தம் எதற்காக – 2

ஜீவனை கொடுத்தது எதற்காக

அத்தனையும் அது உனக்காக – 2


Thursday, 28 July 2022

Padal Padi Magilvene பாடல் பாடி மகிழ்வேனே


 

பாடல் பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா
பாவி என்னை மீட்டாரே துதி அல்லேலூயா
பாரில் வந்தாரே தந்தாரே
அன்பால் மீட்டாரேபரிசுத்தரை
நித்தியரை பாடிப் போற்றுவேன்

அல்லேலூயா பாடுவேன் நான்

1. மகிமையின் ராஜா அவர்
மகத்துவம் நிறைந்தவர்
மனமெல்லாம் நிறையுதே
மகிழ்ச்சியில் சிலிர்க்குதே

2. கனிவான மீட்பரவர்
கண்மணி போல் காப்பாரவர்
கீதங்களால் ஆராதிப்பேன்
ஐக்கியத்தில் ஆனந்திப்பேன்

3. நீதியுள்ள நீதிபரர்
மேகமீதில் வந்திடுவார்
நித்தியானந்த வாழ்வினையே
எனக்காக தந்திடுவார்


Wednesday, 27 July 2022

Nam Yesu Nallavar நம் இயேசு நல்லவர்


 


நம் இயேசு நல்லவர்
ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்

ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
சாத்தானை மிதிப்போம்
தேசத்தை சுதந்தரிப்போம்

1. அதிசயமானவர்
ஆறுதல் தருகிறார்
சர்வ வல்லவர்
சமாதானம் தருகிறார்உனக்கு

2. கண்ணீரைக் காண்கிறார்
கதறலைக் கேட்கிறார்
வேதனை அறிகிறார்
விடுதலை தருகிறார் -இன்று

3. எதிர்காலம் நமக்குண்டு
எதற்கும் பயமில்லை
அதிகாரம் கையிலே
ஆளுவோம் தேசத்தை -நாம்

4. நொறுங்குண்ட நெஞ்சமே
நோக்கிடு இயேசுவை
கூப்பிடு உண்மையாய்
குறையெல்லாம் நீக்குவார் -உன்

5. நண்பனே கலங்காதே
நம்பிக்கை இழக்காதே
கண்ணீரைத் துடைப்பவர்
கதவண்டை நிற்கிறார்

6. எத்தனை இழப்புகள்
ஏமாற்றம் தோல்விகள்
கர்த்தரோ மாற்றுவார்
கரம் நீட்டித் தேற்றுவார்

7. என் இயேசு வருகிறார்
மேகங்கள் நடுவிலே
மகிமையில் சேர்த்திட
மறுரூபமாக்குவார்